இன்னும் இரண்டு மாதங்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் - வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இன்னும் இரண்டு மாதங்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் - வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Update: 2020-07-30 03:28 GMT

கொரோனா தொற்று பரவலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 2018 -19 நிதி ஆண்டிற்கான  வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய  கால அவகாசம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு  உள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை ட்விட்டர் பதிவில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதனால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, வருமான வரி செலுத்துவோருக்கான சலுகைகளை  மேலும் எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, 2019 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய அளிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை, வருகின்ற செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமாக கடந்த ஏப்ரல் மாதமே வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும். கொரோனா பரவலினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கால அவகாசம் முதலில் ஜூலை 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




 


Similar News