தமிழ் சினிமாவிலும் குரூப்பிஸம் உண்டு. மாநாடு பட தயாரிப்பாளர் ஆவேசம்...!

தமிழ் சினிமாவிலும் குரூப்பிஸம் உண்டு. மாநாடு பட தயாரிப்பாளர் ஆவேசம்...!

Update: 2020-07-30 13:27 GMT

பாலிவுட்டில் தான் குரூப்பிஸம் இருக்கும் என்று பார்த்தால் தமிழ் சினிமாவிலும் குரூப்பிஸம் இருக்கிறது. அடுத்ததாக நடிகர்களை தொடர்ந்து தயாரிப்பாளர் ஆவேசம் காட்டியுள்ளனர்.

பாலிவுட்டில் சுஷாந்த் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இதற்கு காரணம் மன உளைச்சல் என்றும், இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் குரூப்பிஸம் தான் முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுபோலவே ஏ.ஆர்.ரகுமான்-யை பாலிவுட்டில் பல படங்களில் சினிமா வாய்ப்பை சிலர் தடுப்பதாகவும் கூறியிருந்தது அதிர்ச்சியை அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் குரூப்பிஸம் இருக்கிறது என்று பலர் டுவிட்டரில் பதிவிட்டு வந்தனர். நட்டி நட்ராஜ்,சாந்தனு ஆகிய நடிகர்கள் கூறியிருந்தனர்.

மேலும் நம் யாருடன் பணியாற்ற வேண்டும் என்றும் யாருடன் பணியாற்றக் கூடாது என்றும் அவர்கள் தான் முடிவு எடுக்கின்றனர் என்று கூறியிருந்தார் சாந்தனு.

இவர் பிரபல நடிகருடைய பையனாக இருந்தாலும் இவர் இப்படி கூறியிருக்கிறது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழ்சினிமாவில் தயாரிப்பாளர்கள் மத்தியில் இருக்கும் குரூப்பிஸம் பற்றி பேசியிருக்கிறார்.இதுபற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பாலிவுட்டில் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையே மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களுக்கும் குரூப்பிஸம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

மேலும் இவ்வாறு கெடுத்துவிடும் சில நபர்களின் முகத்திரைகள் சீக்கிரமாக வெளிவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கிடையில் இவர் பாலிவுட் போல தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது ‌என்றும் விரைவில் தமிழ் சினிமாவிலும் குரூப்பிஸம் ஒழிக்கப்படும் என்று சொன்னார்.

Similar News