காஷ்மீர் பிரிவினைவாதியான சயீத் அலி ஷா கிலானிக்கு பாகிஸ்தானின் மிக உயர்ந்த சிவில் விருது - திருந்தாத பாகிஸ்தான்.!

காஷ்மீர் பிரிவினைவாதியான சயீத் அலி ஷா கிலானிக்கு பாகிஸ்தானின் மிக உயர்ந்த சிவில் விருது - திருந்தாத பாகிஸ்தான்.!

Update: 2020-07-28 10:33 GMT

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளாக தனி காஷ்மீர் வேண்டும் என்று பாகிஸ்தானின் கைக்கூலியாக செயல்பட்டு வரும் ஹரியாட் மாநாடு கட்சியை வழிநடத்திய சையத் அலி ஷா கிலானிக்கு பாகிஸ்தானால் நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்படவுள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது .

இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தான் செனட்டில் திங்களன்று (ஜூலை 27) கீலானிக்கு 'நிஷான்-இ-பாக்கிஸ்தான்' என்ற பட்டத்தை வழங்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மேலும் அவரது பெயரில் ஒரு பொறியியல் கல்லூரியை நிறுவவும் முடிவு செய்யப்பட்டது.

ஜமாத்-இ-இஸ்லாமியின் முஸ்தாக் அஹ்மத், பாகிஸ்தான் செனட்டில் முன்வைத்த தீர்மானத்தில் , கீலானியின் 'தன்னலமற்ற' மற்றும் 'இடைவிடா' போராட்டம் மற்றும் சுயஉரிமைக்கான தியாகங்களை பற்றிப் பேசப்பட்டது. மேலும் கீலானியின் வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் பாக்கிஸ்தானிய கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் முன்மொழிந்தது.

கிலானி ஹரியாட் மாநாடு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்த சில நாட்களில் பாக்கிஸ்தான் இந்த விருதை அறிவித்திருப்பது, கிலானி பாக்கிஸ்தான் உளவு அமைப்பான ISIயின் வழிகாட்டுதலின் பேரில் நடப்பதை சுட்டிக் காட்டுவதாக யூகிக்கப்படுகிறது. ராவல்பிண்டியை சேர்ந்த அப்துல்லா கிலானியை ஹரியாட்டிற்கு வாரிசாக நியமித்துள்ளார் கிலானி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News