உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை - விடுபட்ட மரணங்கள் ஏன்.? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை - விடுபட்ட மரணங்கள் ஏன்.? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

Update: 2020-07-24 11:58 GMT

கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நோய் தொற்று என்பது நோய் எதிர்ப்பு இல்லாத நிலையில் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை நாம் கண்டறிந்து நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு, மாநகராட்சி மூலமாக மாத்திரைகள், கபசுர குடிநீர், வழங்கப்படுகிறது. காற்றில் வேகமாக பரவக்கூடிய பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதால் முக கவசம், கைகளை கழுவுதல் போன்ற பிரச்சாரங்களை தொடர்ந்து செய்து வருவதால், சென்னையை பொறுத்தவரையில் நோய் தொற்று ஜூரோவுக்கு வரும் நிலை விரைவில் ஏற்படும்.

முதல்வர் உத்தரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் நோய்த்தொற்று தாக்கம் குறைந்து வருகிறது என்பது நல்ல செய்தி வந்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 1 ம்தேதி முதல் 12 ம்தேதி வரை ராயபுரம் பகுதியில் 123 பேர் தான் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதற்கு பின்னர் 13 ம்தேதி முதல் 22 ம்தேதி வரை நோய்த்தொற்று எண்ணிக்கை 66 ஆக குறைந்திருக்கிறது.சென்னை என்றாலே பயம் கொண்டிருந்த நிலையில் தற்போது நோய் தொற்று வேகமாக குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டதால், மாநிலத்திலேயே அதிகளவில் தொற்று பாதிக்கப்பட்டிருந்த ராயபுரம் மண்டலத்தில் தற்போது படிப்படியாக தொற்று குறைந்து வருகிறது.

சவாலை முறியடிக்கும் வகையில், முதலமைச்சர் உத்தரவின் படி, ராயபுரம் மண்டலம், தண்டையார்பேட்டை மண்டலம், இதுபோல சென்னையில் உள்ள 18 மண்டலங்களிலும் அமைச்சர்கள் குழு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிகாரிகள் குழு போடப்பட்டு அவர்களும் அவர்களுடைய பணியை செய்து வருகிறார்கள்.

அமைச்சர்கள் குழுவினர் களத்திற்கு சென்று பணிகளை முடுக்கி விட்டதால் நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. உதாரணமாக ராயபுரம் என்றபோது அனைவரும் பயந்தார்கள்.

ஆனால் தற்போது அப்படியே தாக்கம் குறைந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.

ஒருவர் உயிரிழந்த பிறகு அவர் எதனால் இறந்தார் என்று கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறையின் காரணமாக சில மரணங்கள் விடுபட்டு விட்டன. அதனையும் சேர்த்து அரசு தற்போது வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Similar News