உத்திர பிரதேச பா.ஜ.க அரசின் பெயரைக் கெடுக்க நேபாளிகள் துன்புறுத்தப்படுவதாக நாடகம் - சிவசேனாவின் ஈனச் செயல்!

உத்திர பிரதேச பா.ஜ.க அரசின் பெயரைக் கெடுக்க நேபாளிகள் துன்புறுத்தப்படுவதாக நாடகம் - சிவசேனாவின் ஈனச் செயல்!

Update: 2020-07-19 15:14 GMT

சில நாட்களுக்கு முன் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஸ்ரீ ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை, நேபாளத்தில் தான் பிறந்தார் என்றும் ராமர் நேபாளி என்றும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு அயோத்தியைச் சேர்ந்த பண்டிதர்கள் மற்றும் பிற இந்து மத பெரியோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவே இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்ததாக சப்பைக்கட்டு கட்டினார்.

இதன் பின்னர் உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு நேபாளி, தலை மொட்டையடிக்கப்பட்டு 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கட்டாயப்படுத்தி கூற வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த செயலை இந்து அமைப்புகள் தான் செய்திருக்கக்கூடும் என்று ஊடகங்கள் அடிப்படையற்ற பொய்யை பரப்பி வந்தன. இந்நிலையில் தற்போது சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர்தான் அந்த நபருக்கு ₹1000 பணம் கொடுத்து அவ்வாறு செய்யச் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ‌தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட வாரணாசி காவல்துறையினர் அந்த நபர் நேபாளி இல்லை, தர்மேந்திர சிங் என்ற இந்தியர் என்றும் இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். சிவசேனா கட்சியைச் சேர்ந்த அருண் பதக் என்பவரின் ஆட்கள், தர்மேந்திர சிங்கைத் தொடர்பு கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு கங்கா கட் பகுதியில் தலையை மொட்டையடித்துக் கொண்டு 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கூறினால் ₹ 1000 தருவதாகக் கூறி அழைத்துள்ளனர்.

உபி மாநில நீர்வளத்துறையின் ஊழியர் குடியிருப்பில் வசித்து வரும் தர்மேந்திர சிங் ஒரு சேலைக் கடையில் வேலை பார்த்துள்ளார். ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக வேலையின்றி தவித்து வந்ததால் ₹ 1000 கிடைக்கிறதே என்று சென்றுள்ளார். இவருக்கு எந்த வகையிலும் நேபாளத்துடன் தொடர்பு இல்லை என்றும் அவரது முன்னோர்களும் எந்த வகையிலும் நேபாள மரபு வழி வந்தவர்கள் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த சதிச் செயலாலும் ஊடகங்களின் பொறுப்பற்ற நடத்தையாலும் இந்தியாவுக்கான நேபாள தூதர் நீலாம்பர் ஆச்சார்யா உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் நேபாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்குமளவு இந்தியாவின் மீது எதிர்மறையான எண்ணம் தோன்ற காரணமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : Opindia

Similar News