ஊரடங்கு காலத்தில் அனுமதியில்லாமல கொடைக்கானலில் மீன்பிடித்த விமல் மற்றும் சூரி - காவல் நிலையத்தில் புகார் அபராதம் எவ்வளவு தெரியுமா?

ஊரடங்கு காலத்தில் அனுமதியில்லாமல கொடைக்கானலில் மீன்பிடித்த விமல் மற்றும் சூரி - காவல் நிலையத்தில் புகார் அபராதம் எவ்வளவு தெரியுமா?

Update: 2020-07-23 12:56 GMT

ஊரடங்கு காலத்தில் அனுமதியில்லாமல் கொடைக்கானல் அடர் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் மீன் பிடித்தபோது எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்ததை அடுத்து நடிகர் விமல் மற்றும் சூரி மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் மகேந்திரன் என்பவர் புகார் அளித்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 18-ம் தேதி பேரிஜம் ஏரியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றத்துக்காக சூரி, விமல் உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து பல்வேறு சோதனை சாவடியை கடந்து எவ்வாறு இவர்கள் கொடைக்கானலுக்கு வருகை தந்தார்கள் என்பது குறித்து வன அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News