மீண்டும் அமெரிக்காவின் ரகசிய தகவல்களை திருட முயற்சிக்கும் சீனா - கதவை மூடிய அமெரிக்கா, வெளியேறும் சீனா.!

மீண்டும் அமெரிக்காவின் ரகசிய தகவல்களை திருட முயற்சிக்கும் சீனா - கதவை மூடிய அமெரிக்கா, வெளியேறும் சீனா.!

Update: 2020-07-23 07:49 GMT

அமெரிக்காவின் ஹூஸ்டன் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சீனா உடைய தூதரகத்தை மூட அமெரிக்கா மூன்று நாட்கள்  கெடு விதித்துள்ளது. அமெரிக்காவின் முக்கியமான பாதுகாப்பு தகவல்களை பாதுகாக்கவே அமெரிக்கா இத்தகைய முடிவை சீனா மீது எடுத்துள்ளதாக அமெரிக்க அரசு சார்பில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மாகாண செய்தி தொடர்பாளர் மோர்கன் ஆர்டர்ஸ் கூறுகையில் அமெரிக்காவின் ரகசிய தகவல்கள் மற்றும் அறிவுசார் தகவல்களை பாதுகாக்கவே சீன தூதரகத்தை மூடி உள்ளோம் என கூறினார். அமெரிக்காவின் தகவல்களைத் திருடும் இத்தகைய செயல்களில் சீனா ஈடுப்படுவதை அமெரிக்கா ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்றும் கூறினார். சீனாவின் இத்தகைய செயல்களின் மூலம் டிரம்ப் அலுவலகம் கடுமையான நடவடிக்கையை சீனா மீது எடுத்துக்கொண்டு வருகிறது.

இவற்றிற்கு பதில் கூறும் வகையாக சீனாவும் உஹான் மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது

இது பற்றி சீனா உடைய வெளியுறவுத்துறை அமைச்சரின் செய்தி தொடர்பாளர் வாங்கு வென்பின் கூறுகையில் இத்தகைய செயல்கள் இரு நாடுகளுக்கு இடையேயான சர்வதேச சட்டம் மற்றும் உறவை பெரிதும் பாதிக்கும் எனவும், இச்செயல்கள் நியாயமற்ற மூர்க்கத்தனமான செயல் என்றும் அமெரிக்கா இத்திட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் சீனா இத்தகைய செயல்களை வன்மையாக கண்டிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் அமெரிக்காவின் கொரோனா சார்ந்த ஆராய்ச்சிகளில் சீனா வேவுபார்ப்பதாக இரு சீனர்களை அமெரிக்கா கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இது போன்று சீனா அமெரிக்கா உடைய தகவல்தொழில் சார்ந்த தகவல்களை மறைமுகமாக திருடி வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

அமெரிக்காவின் சீன தூதரகத்தை மூடும் அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில் சீன தூதரக அலுவலகத்தில் நெருப்பு பற்றியதாக தீயணைப்பு காவலர்கள் விரைந்துள்ளனர். இது சீனா தகவல்களை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்பட்டிருக்குமோ என சந்தேகப்படும்படி உள்ளது.

அமெரிக்க குடியரசுத்தலைவர் 'டிரம்ப்' உடைய இத்தகைய செயல்கள் சீனா அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுப்பதாகவே தெறிகிறது.

Similar News