டாம் மூடியின் சிறப்பான லெவன் அணி; கேப்டனாக ஹிட்மேன் தேர்வு.!

டாம் மூடியின் சிறப்பான லெவன் அணி; கேப்டனாக ஹிட்மேன் தேர்வு.!

Update: 2020-07-10 12:27 GMT

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் டாம் மூடி. இவருடைய தலைமையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது.

தற்போது இவர் டி20 லெவேன் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு ஹிட்மேன் ரோகித் சர்மாவை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.


அந்த அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்துள்ளார். இதன் பின்னர் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் இருவரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் சொந்த அணிக்காகவும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நிக்கோலஸ் பூரனை விக்கெட் கீப்பராகவும், ஆந்த்ரே ரஸலை ஆல்-ரவுண்டராகவும் தேர்வு செய்துள்ளார். சுழற்பந்து வீச்சாளராக சுனில் நரேன், ரஷித் கான் தேர்வாகியுள்ளார். சுனில் நரேன் டி20 போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர். சூப்பர் ஓவரை மெய்டனாக வீசிய ஒரே பந்து வீச்சாளர்சுனில் நரேன். பிறகு வேகப்பந்து வீச்சாளர்களாக மிட்செல் ஸ்டார்க், ஜஸ்பிரிட் பும்ரா, ஜாஃப்ரா ஆர்சர் தேர்வு செய்துள்ளார். 

Similar News