தூத்துக்குடி பனிமயமாதாக்கு மட்டும் அனுமதி ஏன்? மற்ற தெய்வங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா அல்லது அலட்சியமா? - கேள்வி எழுப்பும் தூத்துக்குடி மக்கள்.!

தூத்துக்குடி பனிமயமாதாக்கு மட்டும் அனுமதி ஏன்? மற்ற தெய்வங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா அல்லது அலட்சியமா? - கேள்வி எழுப்பும் தூத்துக்குடி மக்கள்.!

Update: 2020-07-27 12:11 GMT

இரு தினங்கள் முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பனிமயமாதா சர்ச்சு விழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது "பனிமய மாதா சர்ச்சு விழா ஜூலை 26 முதல் ஆக.5 ஆம் தேதி வரை நடைபெறும்" என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கத்தோலிக்க பிரிவு பிஷப் ஸ்டீபன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு கூறினர்.

மேலும் பிஷப் கூறியது - "பனிமய மாதா சர்ச் விழா கடந்த 438 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிபவனி, விருந்து விழா, நற்கருணை பவனி ஆகியவை நடைபெறாது. விழா வருகிற 26ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5ம் தேதி நிறைவு பெறும் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று திருவிழா ஆரம்பமாகியுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக கடந்த 2 நாள்களாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவற்றில் முக்கியமானது, "மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து,

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் ரத்து, சங்கரன்கோவில் ஆடித்தபசு ரத்து, குலசை முத்தாரம்மன் கோவில் தசராவிழா ரத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம் ரத்து, திருவாரூர் தேரோட்டம் ரத்து, இது மட்டுமின்றி தமிழகத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற அனைத்து கோவில்களின் விழாக்களும் ரத்து இது ஆடி மாதத்தில் கிராமப்புறங்களில் நடத்தப்படும் அம்மன் கோவில் விழாக்கள் முழுவதும் ரத்து. ஆடிஅமாவசையில் நீர் நிலைகளில் இடும் முதியோர்கள் தர்ப்பணம் கூட ரத்து,

ஆனால் தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கட்டுப்பாடுடன் நடத்த அரசு அனுமதி ஏன் அளித்தது? ஏன் அங்கே கொரோனோ பரவாதா? அல்லது அனைவரும் சமம் இந்த மண் மதச்சாற்பற்ற மண் என்று இந்துக்களின் வாயில் மண்ணை போட்டு விட்டு கிருஸ்துவர்களின் திருவிழாக்கள் நடத்த அனுமதி ஏன் என மிகுந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Similar News