சுதந்திர தின விழாவின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மத்திய உள்துறை அமைச்சகம்.!

சுதந்திர தின விழாவின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மத்திய உள்துறை அமைச்சகம்.!

Update: 2020-07-24 07:46 GMT

இந்தியாவில் அதிகமான மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவதல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த சுதந்திர தின விழாவை பற்றி வழிகாட்டு முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதனை பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதுல்: வருடாவருடம் சுதந்திர தின விழாவை மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறோம்.ஆனால், நடப்பாண்டு கொரோனா வைரஸ் காரணத்தினால் சமூக இடைவெளி கடைபிடித்தால், முக கவசம் அணிவது, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்வது போன்ற வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். இதற்கான வேலைகளை மத்திய உள்துறை அமைச்சகமும் மற்றும் சுகாதாரம் அமைச்சகமும் இணைந்து செய்து வருகிறது.

சுதந்திர தின விழாவை இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் பங்கேற்கும் போது ராணுவ மற்றும் டெல்லி காவல்துறையின் அணிவகுப்பு நடக்கும். அதில் 21 குண்டுகள் முழங்க தேசிய கொடி ஏற்றப்பட்டு பிரதமர் மோடி பேசுவார். இதன் பின்பு தேசியகீதம் இசைக்கப்படும்.

காலை 9 மணிக்கு மாநிலத் தலைநகரில் முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றுவார்கள். காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு போன்றவை நடக்கும். இதை போலவே மாவட்ட அளவில் அமைச்சர்கள், ஆணையர்கள், மாஜிஸ்திரேட் போன்றவர்கள் தலைமையில் விழா நடைபெறும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள், மாவட்டங்கள், யூனியன் பிரதேசங்கள், பஞ்சாயத்துக்கள், ஆகிய இடங்களில் விழா நடக்கும் பொழுது மக்கள் கூட்டமாக சேர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் அனைவரும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது முக்கியமானது.

மேலும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள், போன்றவர்களை விழாவுக்கு அழைத்து கௌரவபடுத்தப்படும்.பின்பு கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களில் சிலரை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Similar News