கோவில்களுக்கு கோபுரம் ஏன்? கும்பாபிஷேகம் எதற்காக? மறைந்திருக்கும் ஆச்சர்யம்

கோவில்களுக்கு கோபுரம் ஏன்? கும்பாபிஷேகம் எதற்காக? மறைந்திருக்கும் ஆச்சர்யம்

Update: 2020-07-11 02:01 GMT

கோபுர தரிசனம் புண்ணியம் மட்டுமல்ல பல ரகசியத்தையும் கொண்டது?

நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் மட்டுமே அனைத்தும் வழிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டது கல், மண், மரம், துவங்கி அனைத்திலும் இருக்கும் ஆன்மீக அம்சத்தை கண்டுணர்ந்தவர் நாம். இதற்கு காரணம் இயற்கையே தெய்வம், என்கிற ஆழமான நம்பிக்கை. விவசாயி மண்ணையும், ஆயுத பூஜையின் போது நமக்கு தொழிலாதாரமாக விளங்குகிற பொருட்களையும் என நாம் வழிபடும் முறையும், பண்பும் மிகவும் தனித்துவம் வாய்ந்தது.

இயற்கையை அடுத்து வழிபாட்டிற்கு ஏதுவாகவும் நம் இலக்கிய, கலாச்சார குறியீடுகள் மற்றும் கதைகள் சார்ந்தும் உருவ வழிபாட்ட்டையும் போற்றி வளர்த்தவர் நாம். அந்த வகையில் குல தெய்வ வழிபாடு என்பது உறவுகள், ஒரு சில குடும்பம் கூடி வழிபடுகிற இடமாகவும், ஒரு குறிப்பிட்ட மக்களை சென்றடைகிற முறையாகவும் இருந்தது. ஆனால் கோயில்கள் என்பது கடவுளை இந்த பிரபஞ்சத்தின் அரசனாக கொண்டாடும் ஒரு இடம் என்பதாலேயே அதற்கு பெரும் கோபுரங்கள், மணி மண்டபங்கள் என அரண்மனையில் வாழும் அரசரை விடவும் பிரம்மாண்டமான கட்டிடங்களை உருவாக்க விளைந்தனர் நம் பண்டைய மன்னர்கள்.

வழிபாட்டு தலங்கள் எல்லா கலாச்சார பின்னனி கொண்டவராலும் கட்டப்படும் என்றாலும், தமிழர்களின் அறிவும், விஞ்ஞானமும் உலகத்தரத்தில் அமைந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும், தலைமுறைகள் தாண்டியும் நிற்க க்கூடியதாக இருப்பதே நம்மை சர்வதேச அரங்கில் தனித்து காட்டும் அம்சம்.

நம் கோவில்களில் இருக்கும் கலையம்சமும், பிரமாண்டமும், கம்பீரமும் நம் முன்னோர்களின் கட்டிடக்கலையை உலகிற்கு பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. கோபுரங்கள் உயரமானதாக கட்டப்பட மிக முக்கிய காரணம் அன்றிருந்த மன்னர்களின், நம் முன்னோர்களின் தொலைநோக்கு பார்வை தான்.

உதாரணமாக, ஊரினை அழிக்கும் பேரிடர்கள் அதாவது வெள்ளமோ, ஆழிப்பேரலையோ வந்தால் அப்போது உணவுக்கான பற்றாக்குறை வரக்கூடாது என்பதற்காக, விதைகளில் கலசங்களில் இட்டு நீரும், இடரும் தொட முடியாத உயரத்தில் கோபுர கலசமாக வைத்தனர். இன்று கும்பாபிஷேசகம் என்ற வைபவத்தின் மூலமாக விளங்கும் கலச முறை வழிபாடு இப்படி உருவானதே.

குட நீராட்டு, நீர்தெளி என பலவாறாக கும்பாபிஷேகம் குறிக்கப்பட்டு வருகிறது. சங்க இலக்கியங்கள் கும்பாபிஷேகம் நிகழ்ந்த தற்கான ஏராளமான பதிவுகள் உண்டு. மற்றும் இந்த கும்பாபிஷேகம் என்பது திருக்காவரம் என்னும் யாக சாலைஅமைத்து அதில் ஐம்பூதங்களை வணங்கி வழிபட்டு, மனதை ஒருமுகப்படுத்தும் மந்திரங்கள் முழங்க செய்து மேலும் மங்கள சொற்கள் ஓதப்பட்டு இந்த யாகம் நடைபெறுகிறது.

தங்கம், வெள்ளி, ஈயம், பித்தளை, செம்பு என ஐம் பொன்களால் உருவாக்கப்பட்டதே கலசங்கள். இந்த கலசமானது உருண்டையான வடிவில் விரிந்து பின் முடிவில் கூம்பு போன்ற வடிவில் முற்றுபெறும். இதில் உருண்டையான உருவில் இருக்கும் பகுதியிலேயே தானியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த தானியங்கள் 12 ஆண்டுகள் வரை விளைச்சலை தரக்கூடிய உயிர்ப்புத்தன்மையுடன் இருக்குமென்றும். அதனாலேயே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காச்சோளம், சாமை, எள் போன்ற நவதானியங்கள் தான் அந்த கலசத்தில் நிரப்பட்டுள்ளன. மேலும் கோபுரத்தின் அகலம், நீளத்திற்க்கு ஏற்ப கலசங்களின் எண்ணிக்கை கூடும். ஐம்பொன்னால் செய்யப்படிருப்பதால் மின்னல் இடி போன்ற இயற்கை இடர்களுக்கு ஈடுக்கொடுக்க தன்மையுடன் இருந்து அந்த ஊரினை காக்கும் என்பதே இதன் தார்பரியம்.

இதற்கு உதாரணமாக திகழ்க்கிறது தஞ்சை பெரிய கோவில். இது நம் தமிழ்க கட்டிடக்கலையின் உச்சம். உலக பிரமாண்டங்களில் ஒன்று. தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டிக்கலை மட்டுமல்லாமல் தமிழ்மொழியிற்கு பெருமை சேர்க்கும் மாமகுடமாகவே கட்டப்பட்டுள்ளது.  

Similar News