பகிர்ந்தளிப்பதன் பலனை உணர்த்த சுதாமரிடம் கிருஷ்ணர் நிகழ்த்திய லீலை!

பகிர்ந்தளிப்பதன் பலனை உணர்த்த சுதாமரிடம் கிருஷ்ணர் நிகழ்த்திய லீலை!

Update: 2020-07-25 02:11 GMT

புராணங்கள் என்பது வேத உபநிடதங்களில் சொல்லியிருக்கும் தத்துவார்த்த உண்மைகளை கதைகளின் மூலம் விளக்கும் ஒரு உபாயமே. வேதங்களின் தத்துவ ஆராய்ச்சியில் எல்லோராலும் ஈடுபட முடியாது, அப்படி ஈடுபடுபவர்கள் அதை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அதற்குத்தான் புராணங்களை நம் முன்னோர்கள் இயற்றி உள்ளனர். இந்திய வரலாற்றில் தெளிவாக வரையறுக்கப்பட்ட 18 புராணங்கள் இருக்கின்றன. இந்த புராணங்கள் வெறும் கதையை மட்டும் சொல்லுவதில்லை, இந்த புராணங்களில் இருக்கும் ஒவ்வொறு கதைக்கு பின்பும் மிகப்பெரிய ஆன்மீக மெய்ஞான தத்துவம் பொதிந்துள்ளது.

அதில் பாகவத புராணம் என்பது அறிஞர்கள் எல்லோராலும் கொண்டாடப்படும் ஒன்று. இதை ஆன்மீக ஞான புதையல் என்றும் சொல்லலாம். உதாரணமாக நம் செய்கைகள் எல்லாவற்றையும் ப்ரம்மம் அதாவது இயற்க்கை கவனித்து கொண்டே இருக்கிறது என்பது நம்பிக்கை. அதாவது நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் என்கிற உண்மையை ஒரு வாழ்வியல் சம்பவம் மூலம் விளக்குகிறார் ஶ்ரீ கிருஷ்ணர்.

கண்ணனும் அவர் நண்பரான சுதாமனும் சிறுவயதில் குருகுலத்தில் இருந்த காலத்தில், ஒரு நாள் காட்டில் மரக்கட்டைகளை சேகரிக்க சென்றனர், அப்போது அங்கிருந்த குரு சுதாமனுக்கு சிறிது அரிசிகளை கொடுத்து "இதை இருவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்" என கூறினார். கண்ணனும் சுதாமனும் காட்டிற்கு சென்ற போது இருட்டி மழை வர ஆரம்பித்தது, ஒரு மரத்தின் கீழ் அமர்ந்த இருவரும் இளைப்பாறினார்கள். அப்போது சுதாமன் தான் வைத்திருந்த அரிசியை கண்ணனுக்கு தராமல் தானே உண்டான். கண்ணன் கேட்டும் சுதாமன் அரிசியை வழங்கவில்லை. கண்ணன் ஒரு காரணத்தோடு சிரித்து கொண்டார்.

பின்னாளில் கண்ணன் பெரிய அரசனாக இருப்பதை அறிந்த சுதாமன்ம் அவரை சந்தித்து உதவி கேட்க எண்ணினான். நண்பனை பார்க்க செல்லும்போது ஏதாவது எடுத்து செல்ல வேண்டும் என்று எண்ணி, தான் சிறு வயதில் கொடுக்க தயங்கிய அதே அரிசியை சிறிய அளவில் துணியில் முடிந்து கொண்டு செல்கிறார் சுதாமன். கண்ணன் சுதாமனை பார்த்ததும் ஓடி வந்து அனைத்துக்கொள்கிறார்.

அப்போது ஶ்ரீ கிருஷ்ணரின் அரண்மனை செழிப்பை பார்த்து தான் கொண்டுவந்திருந்த அரிசியை கொடுக்க சுதாமனுக்கு கூச்சமாக இருந்தது. இதை உணர்ந்த கண்ணன், அதை சுதாமனிடமிருந்த்உ பெற்று உண்ண தொடங்கினார். பிறகு அமைதியாக சுதாமனை பார்த்து, வீட்டிற்கு சென்று பார் என்று சொன்னார். சுதாமன் அங்கிருந்து விடைபெற்று வீட்டிற்கு சென்ற பொது அவன் வீடு பல மாற்றங்களை அடைந்து செழிப்பாக இருந்தது, நிறைய பொருட்களும் பரிசுகளும் செல்வங்களும் சுதாமரின் வீட்டில் இருந்தன, சுத்தமான கண்ணனின் பெருமையை புரிந்து கொண்டார் சுதாமன். இந்த பிரபஞ்சம் நாம் கொடுப்பதை நமக்கு 10 மடங்காக திருப்பி கொடுக்கிறது என்பதை இது போன்ற கதைகள் மூலம் புராணங்கள் நமக்கு விளக்குகின்றன, இது போன்ற ஏரளமான கதைகள் நம் புராணங்களில் இருக்கின்றன . 

Similar News