"எங்கடா உன் கணக்கு வாத்தியார்!" - நஷ்டத்தில் ஷ்ரமிக் ரயில்களை இயக்கிய ரயில்வே துறை லாபம் ஈட்டியதாக பதிவிட்ட ராகுல் காந்தி.!

"எங்கடா உன் கணக்கு வாத்தியார்!" - நஷ்டத்தில் ஷ்ரமிக் ரயில்களை இயக்கிய ரயில்வே துறை லாபம் ஈட்டியதாக பதிவிட்ட ராகுல் காந்தி.!

Update: 2020-07-25 13:24 GMT

தான் ஏதோ பெரிய அறிவுஜீவி என்பது போலும் தனது கருத்துக்களைக் கேட்காவிட்டால் மக்கள் அறிவுப் பசியால் மாண்டு போவார்கள் என்பது போலும் அவ்வப்போது நாட்டு நடப்பு குறித்த தனது கருத்துக்களை ஒரு இருட்டறையில் தனியாக அமர்நது ஓரங்க நாடகம் போல் நடித்து வெளியிட்டு வரும் ராகுல் காந்தி, தான் ஒரு பொறுப்புள்ள தலைவர் என்று காட்டிக் கொள்ளும் முயற்சியில் மத்திய அரசின் நடவடிக்கைகளை குறை கூறிக்கொண்டு இருக்கிறார். பொதுவாக எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவது அவசியம் எனினும் ராகுல் காந்தி பொய்களை கட்டவிழ்த்து விடுவதையே வேலையாக வைத்திருக்கிறார்.

அதில் லேட்டஸ்ட் பொய் தான் ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் மூலம் மத்திய அரசு பெருமளவில் வருவாய் ஈட்டுகிறது என்பது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழைகளுக்கு எதிரான அரசு என்று குற்றம் சாட்டி வரும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப அறிமுகப்படுத்தப்பட்ட ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் மூலம் வருவாய் ஈட்டுவதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

இந்தியில் பதிவிட்டிருந்த அவரது பதிவின் சாராம்சம் இதுதான். "நாட்டை நோய் மேகங்கள் சூழ்ந்துள்ளன, மக்களை பல பிரச்சினைகள் சூழ்ந்துள்ளன, இது நல்ல வாய்ப்பு - பேரழிவை வாய்ப்பாக பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கிறது ஏழைகளின் எதிரியான இந்த அரசு".

இந்த ஞானோதயம் ரயில்வே அமைச்சகம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட ஷ்ரமிக் சிறப்பு ரயில்களின் மூலம் ₹ 429.90 கோடி வருவாய் ஈட்ட பட்டதாக வெளியிட்ட தரவுகளைப் பார்த்து உதித்துள்ளது. ஆனால் இந்த தொகை மாநில அரசுகள் தரவேண்டிய 15% டிக்கெட் விலௌ மட்டுமே. முன்னர் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் விலை குறித்து சர்ச்சை எழுந்தபோது ரயில்களை இயக்குவதற்கு ஆகும் செலவில் 15% மட்டுமே டிக்கெட் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையை மாநில அரசுகள் செலுத்தவேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ₹ 429.90 கோடி மாநில அரசுகள் ரயில்வே துறைக்கு அளிக்கவேண்டிய 15% டிக்கெட் விலையாகும்.

உண்மை என்னவென்றால் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்ட 63 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருவருக்கு ₹ 3,400 வீதம் மொத்தம் ₹ 2,142 கோடி செலவாகி இருப்பதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஷ்ரமிக் சிறப்பு ரயில் மூலம் பயணித்த ஒருவருக்கு சராசரியாக ₹ 600 டிக்கெட் விலையாக நிர்ணயிக்கப்பட்டதாகவும் ஆனால், இந்த ரயில்களை இயக்க ஒருவருக்கு ₹ 3,400 வீதம் ₹ 2,142 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. டிக்கெட் விலை மூலம் கிடைத்த வருவாய் ₹ 429 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை ரயில்வே துறை நஷ்டத்திற்கு இயக்கிய நிலையில் கணக்கு வராத ராகுல் காந்தி வரவு, செலவு கணக்குகளைப் புரிந்து கொள்ளாமல் வழக்கம் போல நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

Similar News