கமலுடன் ஜோடியாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!!!

கமலுடன் ஜோடியாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!!!

Update: 2020-07-20 11:32 GMT

2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் வேட்டையாடு விளையாடு. அந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த படத்தை மையமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டன.

கவுதம் மேனன் இயக்கிய இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். தற்போது இந்த படம் இரண்டாம் பாகம் எடுப்பதாக முடிவு எடுத்துள்ளனர் படக்குழுவினர்.மேலும் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்த படத்தில் அனுஷ்காவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த படம் திரையில் வரும் பொழுது அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் படத்தைப் போல அதிக வெற்றியை குவிக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Similar News