உலகளாவிய முதலீடு சந்தையாக மாறிய இந்தியா - பாரத் பெட்ரோலிய பங்குகளை வாங்க உலக நாடுகளிடையே கடும் போட்டி.!

உலகளாவிய முதலீடு சந்தையாக மாறிய இந்தியா - பாரத் பெட்ரோலிய பங்குகளை வாங்க உலக நாடுகளிடையே கடும் போட்டி.!

Update: 2020-07-17 06:36 GMT

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தனியார்மயமாக்குவது மோடி அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். பிபிசிஎல் நிறுவனத்தில் 52.98 சதவீத பங்குகளுக்குகான டெண்டர் அறிக்கைய சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கியுள்ள நிலையில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஹைட்ரோகார்பன் நிறுவனங்கள் பாரத் பெட்ரோலிய எரிவாயு நிறுவனத்தில் தனது பங்கை நிலைநாட்ட ஆர்வம் கொண்டிருக்கிறது.

சீனாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தி சந்தையில் சில காலமாக பங்குகள் கீழ்நோக்கிச் செல்கின்றன. இதனால் பல உலக நாடுகள் சீனாவின் முதலீடு செய்ய தங்குகின்றன மற்றும் அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் 2013 ஆய்வின்படி, தொழில்நுட்ப ரீதியாக மீட்கக்கூடிய ஷேல் என்ற எரிவாயு வளங்களை சீனா 1,115 டிரில்லியன் கியூ.எஃப் அமெரிக்காவிற்கு 1,161 டிரில்லியன் கியூ.எஃப்இல் வளங்களைக் கொண்டுள்ளது.

இப்போது, ​​சீனா எண்ணெய் துறை முதலீடுகளுக்கு இன்னும் சாதகமற்ற இடமாக மாறியுள்ளது. அமெரிக்கா சீனா மீது பெரிய வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது, ஆகவே பல நாடுகள் சீனாவை புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். உலகப் பொருளாதாரம் மீண்டு, எண்ணெய் துறையின் தேவையும் அதிகரிக்கத் தொடங்கும் போது, ​​அமெரிக்காவின் பெரிய எண்ணெய் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களும் சீனாவில் முதலீடு செய்யத் தயங்குவதோடு, அதற்கு பதிலாக அதன் தெற்கு அண்டை நாடான இந்தியாவுக்குச் சென்றால் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும் என்ற நோக்கத்தோடு இந்தியாவின் மீது ஆர்வம் காட்டுகிறது.

ஹைட்ரோகார்பன் துறையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 5 மில்லியன் பீப்பாய்கள் நுகர்வு கொண்ட ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் சந்தையாக இருக்கின்றது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோர் கொண்டிருக்கும் நாடாக இருக்கிறது.

எரிசக்தி துறைக்கு மோடி அரசு சில பெரிய வகுத்து வருகிறது. கடந்த ஆண்டு, மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், 2023 க்குள் 58 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்யப்படுவதாக அறிவித்திருந்தார்.மேலும் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 2024 க்குள் குழாய் இணைப்புகள், இறக்குமதி மற்றும் நகர எரிவாயு விநியோக நிலையங்களில் முதலீடு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

இத்தகைய சூழ்நிலைகளில்தான் பிபிசிஎல் முதலீட்டு திட்டங்கள் மிகவும் நம்பிக்கையான மற்றும் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் ஒன்றாக உலக நாடுகளால் கருதப்படுகிறது. மேலும் சவுதி அரேபியாவின், அபுதாபி நேஷனல் ஆயில் கோ, ரஷ்யாவின் ரோஸ் நேபிட் ஆகியவை பிபிசிஎல் நிறுவனத்தில் இந்திய அரசிடமிருந்து பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கு தனது பங்களிப்பை அதிகாரப்பூர்வமாக தனது அறிக்கையின் மூலம் பதிவு செய்துள்ளது.

சாதகமான முதலீடு மற்றும் அரசியல் பங்களிப்பை கொண்ட ஒரு பெரிய எண்ணெய் சந்தை இந்தியா. இதனால்தான் அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்தியாவின் மூன்றாவது பெரிய சுத்திகரிப்பு நிறுவனமாகவும், 21 சதவீத சந்தைப் பங்கைக் கொண்ட நாட்டின் இரண்டாவது பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளராகவும் இருக்கும் பிபிசிஎல் இந்த உலகளாவிய நிறுவனங்களுக்கு சிறந்த நிறுவனமாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் தளர்த்தப்பட்ட பிபிசி௭ல் இயக்குனர்களில் ஒருவரான விஜயகோபால் கூறுகையில், "எங்களது சுத்திகரிப்பு நிலையங்கள் கிட்டத்தட்ட 83% சாதாரண திறன்களில் இயங்குகின்றன, எங்கள் விற்பனை மே மாதத்தில் சாதாரண விற்பனையில் விட 76% அதிகம் ஆகும்.மேலும் முதலீட்டாளர்கள் எந்த ஒரு தயக்கமும் இன்றி எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்று கூறினார்.

பிப்ரவரியில் 7.4 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது பிபிசிஎல் மதிப்பு சுமார் 5.7 பில்லியன் டாலர்களாக குறைந்திருக்கலாம். ஆனால் அரசுக்கு சொந்தமான நிறுவனம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான பல வழிகள் இருக்கின்றன அதனைக் கொண்டு பிபிசிஎல் முன்னோக்கி செல்லும் என அனைவராலும் நம்பப்படுகிறது.

ஆரம்ப ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 வரை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயினும், சர்வதேச என்ணெய் நிறுவனங்கள் சீனாவிலிருந்து விலகிச் செல்வதால், பிபிசிஎல்லை தனியார்மயமாக்கவும், 14.6 பங்களிப்பை உயர்த்துவதற்கான செயல்முறையை மோடி அரசாங்கத்திற்கு ஒரு சிறந்த நேரம் இதைவிட இருந்திருக்க முடியாது என்று தெரிகிறது. இதன் மூலம் உலகளாவிய எண்ணெய் நிறுவனங்கள் இந்தியா மீது மிகுந்த ஆர்வத்தைக் காட்டிவருகிறது.

Similar News