ராமரை நேபாளி என்று கூறிய 'பைத்தியம் பிடித்த ஒலி ஷர்மாவின் ஆட்சி ஒரு மாதத்துக்குள் கவிழ்ந்துவிடும்': அயோத்தி ராமர் கோவில் குருக்கள் சாபம்!!

ராமரை நேபாளி என்று கூறிய 'பைத்தியம் பிடித்த ஒலி ஷர்மாவின் ஆட்சி ஒரு மாதத்துக்குள் கவிழ்ந்துவிடும்': அயோத்தி ராமர் கோவில் குருக்கள் சாபம்!!

Update: 2020-07-14 09:13 GMT

ராமபிரான் ஒரு நேபாளி என்றும் உண்மையான அயோத்தி நேபாளம் நாட்டில் தான் உள்ளது என சர்சைக்குரிய கருத்தை தெரிவித்த நேபாளம் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி ஒரு பைத்தியம் பிடித்தவர் என்றும், அவருடைய அவதூறான கருத்துக்களால் அவருடைய ஆட்சி இன்னும் ஒருமாதத்தில் கவிழ்ந்துவிடும் என்றும் ராமர் கோவில் குருக்கள் மகந்த் திநேந்திர தாஸ் கடுமையாக சாடியுள்ளனர்.

நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் : இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது என்றும் முதலில் ஸ்ரீ ராமர் பிறந்த இடம் இந்தியாவில் உள்ள அயோத்தி என்று கூறுவது தவறானது என்றார். உண்மையில் ராமர் பிறந்தது நேபாளத்தில்தான் என்று கூறிய அவர் ராமர் இந்தியர் அல்ல என்றும், நேபாளி என்றும், நேபாளத்தில் பிர்குன்ச் மாவட்டத்தில் உள்ள இப்போது சின்னஞ்சிறிய கிராமமாக உள்ள தோரி என்கிற இடம்தான் உண்மையான அயோத்தி என்றும், இங்குதான் அவர் பிறந்தார் எனவும் கூறினார். மேலும் சீதை இந்தியாவை சேர்ந்தவர் என்றும் அவர் வாழ வந்த இடம் நேபாளம்தான் என்றும், ஆனால் இந்தியா கலாச்சார அத்துமீறல் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். அவருடைய பேச்சுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல், நேபாளத்திலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சீனாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஒலி, அரசியல் சர்க்கஸ் நடத்த முற்படுவதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேபாள பிரதமரின் கருத்தை கேட்டு வெகுண்டு எழுந்த ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் கோவில் குருக்கள் மகந்த் திநேந்திர தாஸ் நேபாள பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி பைத்தியம் போல உளறுவதாக கண்டனம் தெரிவித்துள்ள கோவில் குருக்கள், ராமபிரான் சரயு நதி அருகே அயோத்தியில் தான் ராமர் பிறந்தார் என்பதற்கு வரலாற்று சான்றுகள் இருப்பதாக தெரிவிதார். உண்மையில் சீதைதான் நேபாளம் நாட்டைச் சேர்நதவர் என்றும் இதை மாற்றி ராமபிரான் என்று கே.பி.ஷர்மா ஒலி பைத்தியம் பிடித்தவரைப் போல உளறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

சீனா மற்றும் பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா இதுபோன்ற கருத்துகளைப் பேசி வருவதாகவும், இது போன்று பேசிக் கொண்டிருந்தால் இன்னும் ஒரு மாதத்தில் நேபாளம் அரசு நிச்சயம் கவிழ்ந்து விடும் என்றும் சாபமிட்டார்.

https://www.timesnownews.com/india/article/kp-sharma-oli-is-insane-ayodhya-priests-condemn-nepalese-pm-for-claiming-lord-rama-was-born-in-nepal/621063

Similar News