கொரானா வைரஸ் : பக்ரீத் அன்று திறந்த மைதானத்தில் தொழுகை நடத்த கர்நாடக மாநிலம் தடை.!

கொரானா வைரஸ் : பக்ரீத் அன்று திறந்த மைதானத்தில் தொழுகை நடத்த கர்நாடக மாநிலம் தடை.!

Update: 2020-07-28 02:20 GMT

திறந்த மைதானத்தில் பக்ரீத் தினத்தன்று நமாஸ் வழங்க சிறுபான்மை நலத்துறை அமைச்சகம், ஹஜ் மற்றும் வக்ஃப் ஆகியவை தடை விதித்துள்ளதாக டெய்ஜி வேர்ல்ட் தெரிவித்துள்ளது. மேலும் இட்கா மைதானத்தில் நமாஸுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தவிர, மசூதிகளுக்குள் நமாஸை செய்ய 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். நமாஸை நடத்த வேறு எந்த இடமும் அனுமனுதிக்கப்படாது என்று அறிவித்துள்ளனர் .

நமாஸை செய்ய மசூதிக்குள் நுழையும் போதும், தனிநபர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்டவர்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி தூரத்தை கடைபிடிக்க மசூதிகளுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன, மேலும் வெப்பநிலையை பதிவு செய்த பின்னரே நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும்.

பக்ரித் ஜூலை 31 ஆம் தேதி தட்சிணா கன்னடம், உடுப்பி மற்றும் கோடகு பகுதிகளில் கொண்டாடப்படும், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கொண்டாடப்படும்.

Source:https://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=734332

Similar News