சூப்பர்ஸ்டார் 'அண்ணாத்த' படம் கைவிடப்பட்டதா - படக்குழுவினர் தகவல்.!

சூப்பர்ஸ்டார் 'அண்ணாத்த' படம் கைவிடப்பட்டதா - படக்குழுவினர் தகவல்.!

Update: 2020-07-29 10:27 GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் 'அண்ணாத்த'.இந்த படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிக்கும் இந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ,மீனா,நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர் .

இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் தீம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஷூட்டிங் தொடங்க இருந்த நிலையில் ரஜினிகாந்த் தற்போது படப்பிடிப்பு வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.அவர் கொரோனா முடிந்தபின்பு படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்த்த திரைப்படம் தற்போது பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 50% மீதமுள்ள நிலையில் ரஜினிகாந்த் கொடுத்த சம்பளத்தை திருப்பிக் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு மறுப்பு தெரிவித்த படக்குழுவினர் இது "முற்றிலும் வதந்தி" என்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது எடுக்க முடியாமல் இருக்கிறது. ஆனால் கொரோனா முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.

Similar News