மறைந்த சுஷாந்த் சிங்கிற்கு நினைவு கூறும் வகையில் அவரின் பெயரில் "சாலை" - ரசிகர்கள் மகிழ்ச்சி.!

மறைந்த சுஷாந்த் சிங்கிற்கு நினைவு கூறும் வகையில் அவரின் பெயரில் "சாலை" - ரசிகர்கள் மகிழ்ச்சி.!

Update: 2020-07-11 13:37 GMT

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 14ம் தேதி மும்பை BANDRA என்ற பகுதியில் உள்ள தனது வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்ட காரணத்தால் திரையுலகமே மிகவும் வருத்தத்தில் இருந்தது. இவர் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலைக்கு ஆளானார் என கூறப்படுகிறது.

இவர் கடைசியாக நடித்த *Dil Bechaara* என்ற படத்தை டிஸ்னி, ஹாட்ஸ்டாரில் ஜூலை 24ஆம் தேதி வெளியிடுவதாக முன்னதாகவே அறிவிப்புகள் வந்துள்ளன. மேலும் இதன் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

இந்த நிலையில் அவருக்கு நினைவு கூறும் வகையில்

பீகாரில் உள்ள பூர்னியாவில் உள்ள சாலைக்கு "சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை" என மறு பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன் இதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் இது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Similar News