தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Update: 2020-07-22 12:42 GMT

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி இன்று வரையிலும் கொரோனா தொற்றுக்கு பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் முற்றிலுமாக ஊரடங்கு இருந்த நிலையில் தற்போது தளர்வுகள் ஏற்பட்டு கொஞ்சம் தனிமனித இடைவெளியுடன் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் சொல்கின்றனர்.

கொரோனா காரணமாக கடைகள் திறக்கப்பட்டு தொழில்கள் சாதாரணமாக நடைபெற்று இருக்கின்றன. ஆனால் சினிமா துறையில் மட்டுமே இன்னும் பழைய நிலைக்கு வராமல் இருக்கிறது.

அதனை தொடர்ந்து தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கலாம் என்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இன்னிலையில், பேட்டி ஒன்றில் திரையரங்கில் எப்போது திறக்கலாம் என்று இவர் அறிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார்.

மேலும் வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு படம் பார்த்தால், உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது எனவே திரையரங்குகளை தற்போது திறக்க இயலாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் மிக சோகத்தில் இருக்கின்றனர்.

Similar News