சீன ஜம்பம் இனி எடுபடாது, அதிக பணம் கொடுத்தாவது இந்திய பொருளை வாங்கும் முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் : சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் வியாபாரிகள் கருத்து.!

சீன ஜம்பம் இனி எடுபடாது, அதிக பணம் கொடுத்தாவது இந்திய பொருளை வாங்கும் முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் : சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் வியாபாரிகள் கருத்து.!

Update: 2020-07-08 02:43 GMT

இந்தியா சீனாவுடன் நல்லெண்ண அடிப்படையில் உறவு வைக்க வேண்டும் என்று நினைத்தால் கூட சீனா அவ்வப்போது அதன் விரிவாக்க குணத்தால் விஷம புத்தியை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த டோக்ரான், கல்வான் எல்லை சண்டைகளில் அதை மக்கள் பார்த்து விட்டனர்.

ஏற்கனவே இந்திய மக்கள் சீனாவில் இருந்து வரும் மலிவான பொருள்களை நிராகரித்து அதற்கு பதிலாக இந்தியப் பொருள்களை வாங்கி நம் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற மன நிலையில் இருந்தனர்.

இப்போது சீனாவுடன் மேலும் கசப்பான சம்பவங்கள் ஏற்ட்டதை அடுத்து மத்திய அரசும் சீனாவின் பல பொருள்களுக்கும், சேவைகளுக்கும் தடை விதித்துள்ளது. இந்திய பொருள்களில் உற்பத்தியை ஊக்குவிக்க பல திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் எதிராக இருப்பதாகக் கூறி 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து விட்டது. இதை அடுத்து சீனப் பொருள்கள் மீதான பகிஷ்கரிப்பு உணர்வு இப்போது உச்சத்தில் இருக்கும் நிலையில், விலை மலிவான சீனப் பொருள்களை விற்கும் 1500 கடைகள் இயங்கும் சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனம் கருத்துக்களை அறிந்து பெறப்பட்ட தகவல்கள்:

அகில இந்திய மின்னணுவியல் பொருள்கள் வணிக சங்கத்தை சேர்ந்த முகேஷ் குப்சன்தனி கூறுகையில் " இந்தியாவில் உள்ள எலக்ட்ரானிக் வர்த்தகர்கள் இப்போது சீனாவில் இருந்து வரும் எலக்ட்ரானிக் பொருள்களை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர், என்றாலும் உண்மையான நிலவரத்தை தெரிந்து கொள்ள மேலும் சில வரங்கள் தேவைப்படும், நான் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சீனா சென்று வருபவன், என்னுடைய அனுபவத்தின்படி நான் கூறுவது என்னவென்றால் " இந்தியாவிலேயே தொழில் துறை நகரங்களை ஏற்படுத்த வேண்டும், இங்குள்ள வர்த்தகர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் பொருள்களை தயாரிக்க வேண்டும், வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவாலை சமாளிப்பதற்கு அரசு உதவ வேண்டும் என்றார்.

இங்குள்ள மேலும் ஒரு டெல்லி வர்த்தகர் கூறுகையில் " சீன பொருள்களின் தட்டுப்பாட்டால் தற்போது அதன் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன, இது தர்காலிகமானதுதான், என்றாலும் பதிலுக்கு இந்திய பொருள்கள் இன்னும் தேவைக்கு தக்கவாறு வரவில்லை, எனவே சீன பொருள்கள் மீண்டும் வந்தால் நுகர்வோர்கள் பகிஷ்கரிப்பு உணர்வை மறந்து மீண்டும் வாங்கி செல்வார்கள் என்று கூறினார்.

ஆனால் ரிச் சந்தையின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில் " டெல்லியில் சீன எலக்ட்ரானிக் பொருள்களுக்கு எதிராக புறக்கணிப்பு உணர்வு தொடங்கிவிட்டது. இப்போது அது தெற்கு நோக்கி வரத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் அதிக பணம் கொடுத்தாவது இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை வாங்க தயாராகிவிட்டனர், அதனால் சீன பொருள்களின் புறக்கணிப்பு உணர்வு வர்த்தகர்களை பாதிக்காது "என்றார்.  

http://www.puthiyathalaimurai.com/newsview/73392/Anti-China-sentiment-looms-over-Ritchie-Street

Similar News