தங்கத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசின் அடுத்தகட்ட முயற்சி! கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அறிவிப்பு!

தங்கத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசின் அடுத்தகட்ட முயற்சி! கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அறிவிப்பு!

Update: 2020-07-31 10:55 GMT

வரி ஏய்ப்பைத் தடுக்கவும், தங்க இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக தங்கம் வைத்திருக்கும் பொதுமக்களுக்கு பொது மன்னிப்பு திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

கணக்கில் காட்டாத தங்கம் வைத்திருப்போர் வரியும், அபராதமும் செலுத்தினால், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கையைத் தவிர்க்கும் திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவின் கீழ், கணக்கிடப்படாத உலோகத்தை வைத்திருக்கும் மக்கள், அது குறித்த விவரத்தை அதிகாரிகளுக்கு அறிவிக்கவும், வரி, அபராதம் செலுத்தவும் கேட்டுக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து கருத்துக்களைக் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதலீட்டிற்கு மாற்று வழிகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் தங்க இறக்குமதியை குறைக்க முடியும். தங்கள் பதுக்கலை தாமாக முன்வந்து அறிவிக்கும் நுகர்வோர் சில ஆண்டுகளாக, சட்டப்பூர்வமாக்கப்பட்ட தங்கத்தை அரசாங்கத்திடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு  மற்றும் குறைந்த வட்டி விகிதங்களுக்கிடையில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 30% உயர்ந்துள்ளது. கோல்ட்மேன் சாச்ஸ் குரூப் ஒரு அவுன்ஸ் 2,300 டாலராக உயரும் என்றும் கணித்துள்ளது.

Similar News