அயோத்தியில் ராமர் கோவில்: ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் பேச்சை துவங்கினர் - பிரதமர் மோடி.!

அயோத்தியில் ராமர் கோவில்: ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் பேச்சை துவங்கினர் - பிரதமர் மோடி.!

Update: 2020-08-05 08:22 GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை பிரதமர் மோடி நாட்டுகிறார். இந்த விழாவுக்கு 175 பேரை அழைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கிளம்பிய பிரதமர் மோடி லக்னோவுக்கு வந்த பின்பு ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வந்தடைந்தார். இதன் பின்பு அயோத்தியில் உள்ள அனுமன்கரி கோவில்லுக்கு சென்று அனுமனை வழிபாடு செய்தார். ராமனின் காவலரான அனுமனுக்கு ஆர்த்தி காட்டி வழிபாடு செய்தார்.

பின்பு ராம ஜென்ம பூமிக்கு சென்று குழந்தை ராமருக்கு பூஜை செய்தார் மற்றும் ராம ஜென்ம பூமியில் பாரிஜாத மரக்கன்றை நட்டு வைத்தார் பிரதமர் மோடி.

தற்போது ராமர் பூமி கோவிலின் பூஜை விழா துவங்கப்பட்டு, அதில் தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிலையில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை பிரதமர் மோடி நாட்டி வைத்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் மோடியால் நடப்பட்டது.

https://twitter.com/ANI/status/1290921432877211648

இதன் பிறகு பேசிய பிரதமர் மோடி: ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் பேச்சை துவங்கினர். உலகம் முழுவதும் இருக்கும் ஸ்ரீ ராமபிரான் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இது நடக்கும் என இந்தியா மக்கள் நினைக்கவில்லை. சுதந்திரத்துக்கு போராடியது போலவே ராமர் கோவிலுக்காக ஏராளமானோர் போராடி உள்ளனர். இன்று அயோத்தி விடுதலை பெற்றுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.ராமர் கோவில்ல் கட்டப்பட வேண்டும் என்பது பலருடைய கனவு இன்று நிறைவேறியுள்ளது. பல தடைகளை தாண்டி இன்று ஸ்ரீ ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு சம்யத்தில் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமை கடைபிடித்தனர். 

தமிழில் கம்ப ராமாயணம் உள்பட பல மொழிகளில் ராமாயணம் உள்ளது.தாய்லாந்து , மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் ராமரின் வழிபாடு இருக்கிறது. முஸ்லீம்கள் அதிகம் வாழ்த்து கொண்டிருக்கும் இந்தோனேஷியாவில் பல ராமாணயங்கள் இருக்கிறது. நேபாளத்துக்கும் ராமரின் வரலாற்று தொடர்பு இருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தின் அடையாளமாக ராமர் கோவில் இருக்கும். 

 

 

Similar News