கொரோனாவை அழிக்க சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம் - உலக சுகாதார இயக்குனர் எச்சரிக்கை.!

கொரோனாவை அழிக்க சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம் - உலக சுகாதார இயக்குனர் எச்சரிக்கை.!

Update: 2020-08-04 05:28 GMT

கொரோனா வைரஸை அழிப்பதற்கு சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரொஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக அளவில் தினந்தோறும் கொரோனா வைரஸின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் மற்றும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளது.

தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரொஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் கொரோனவுக்கான ஒரு போதும் சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை அழிப்பதற்கு பல நாடுகளில் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது. ஆனாலும் கொரோனாவுக்கான துல்லியமான மருந்து எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்றவற்றை உலக நாடுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.   

Similar News