கிறிஸ்துவ மிஷனரிகளின் சதியால் மேலாடையை இழந்த இந்துப் பெண்கள் - விவரிக்கும் மிஷன் காளி இயக்கம்.!

கிறிஸ்துவ மிஷனரிகளின் சதியால் மேலாடையை இழந்த இந்துப் பெண்கள் - விவரிக்கும் மிஷன் காளி இயக்கம்.!

Update: 2020-08-03 03:05 GMT

நமது இந்து சமுதாயத்தின் மீது நீண்டகாலமாக ஒரு மோசமான குற்றச்சாட்டு கிருஸ்துவ மிஷனரிகளால் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உயர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே மேலாடை அணிய அனுமதிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டது. 'உடை' என்பது தனி மனித சுதந்திரம். ஆனால் சாதியை காரணம் காட்டி ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் மானத்தை காத்துக்கொள்ள உயர் சாதி இந்துக்கள் அனுமதிக்கவில்லை. இப்படி மனிதர்களை உயர் சாதி, தாழ்ந்த சாதி என்று பிரித்து 'இந்து மதம்' செய்த சூழ்ச்சிகள் ஏராளம்.

ஆனால் ஐரோப்பிய கிருஸ்துவர்களின் வருகைக்கு பிறகே, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர்களுக்கு மேலாடை அணியும் உரிமையும் பெற்றுத்தரப்பட்டது. மொத்தத்தில் துர்மதமான இந்து மதத்திலிருந்து, மக்களை மீட்டு காப்பாற்றியது கிருஸ்துவ மதம்' என்று அப்பட்டமாக பொய் பேசி வருகின்றனர்.

கிருஸ்துவ மிஷனரிகள் பரப்பும் இந்த கதை உண்மையா? என்றால் நிச்சயம் கிடையாது. சிவபெருமானால் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட 'தெய்வத் தமிழ்-ஐ' காட்டுமிராண்டி மொழி என்று ஒப்பிலக்கணம் எழுதிய மிஷனரிகள் 'இந்து மதத்தை' பற்றியும் இந்து மக்கள் பற்றியும் எப்படி உண்மை வரலாற்றை கூறுவார்கள்? மக்களை மதமாற்றுவதற்காக கிருஸ்துவ மிஷனரிகளால் செய்யப்பட்ட வரலாற்று திரிபுதான் திருவிதாங்கூர் விவகாரம்!

திருவிதாங்கூர் விவகாரத்தை பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்பு முதலில் கிருஸ்துவ மிஷனரிகளின் கலாச்சாரம் எப்படி இருந்தது? என்பதை பார்த்துவிடுவோம். முதன்முதலில் ஆடை தைக்கும் ஊசியை கண்டுபிடித்தவர்கள் சீனர்களே! பெண்களுக்கு முதன்முதலில் மேலாடை, கீழாடை ஆகியவற்றை தனியாக தைத்து பயன்படுத்தியவர்களும் சீனர்கள்தான்.

அப்படிப்பட்ட சீனாவிற்கு இன்றிலிருந்து சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு கிருஸ்துவத்தை பரப்புவதற்காக, சீன மொழியில் எழுதப்பட்ட பைபிளோடு கிருஸ்துவ மிஷனரிகள் சென்றனர்.

அப்போது பைபிளில் ஆபாசம் நிறைந்த 'சாலமோனின் உன்னத பாட்டு' என்ற அதிகாரத்தை சீனர்கள் கவனித்தனர். அந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேவமனிதர்களின் விளையாட்டுக்களை பற்றி படித்த சீனர்கள் கொதித்துவிட்டனர். சீனர்கள் கிருஸ்துவ மிஷனரிகளை பார்த்து, 'நீங்கள் கொண்டு வந்திருக்கும் நூல் மிகவும் ஆபாசமாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு மோசமான நூலை நீங்கள் சீனாவில் பரப்பக்கூடாது' என்று தடைபோட்டனர்.

ஆனால் சீனர்களை ஈர்த்து மதமாற்றுவதற்காக கிருஸ்துவ பெண்கள், கவர்ச்சி உடையணிந்து திறந்த மார்பகங்களுடன், சீன ஆண்களை கவர முயற்சித்தனர். இத்தகைய மாயப்பெண்களின் வலையில் தங்கள் நாட்டு ஆண்கள் வீழ்ந்துவிடக்கூடாது என்று சீனர்கள் எச்சரிக்கை விடுத்தனர். (பக்கம் 260, விவேகானந்தரின் வீர பொன்மொழிகள், பாகம் 8)

ஆம்! கிருஸ்துவர்களிடையே இதுப்போன்ற மோசமான பழக்கங்கள் இருந்து வந்தன. 15 -16ம் நூற்றாண்டுகள்வரை முதலிரவின்போது, பெண்களின் வாழ்க்கையை ஆசிர்வதிப்பதற்காக நடு இரவில் மண வீட்டிற்கு பாதிரியார்கள் செல்லும் பழக்கம் இருந்து வந்தது.

மதம் மாற்றுவதற்காக தங்கள் பெண்களையே பகடையாக பயன்படுத்தியுள்ளனர் மிஷனரிகள்.

இப்போது தொன்றுதொட்டு இந்தியாவில் மற்றும் குறிப்பாக தமிழகத்தில் பெண்களின் ஆடை எப்படி இருந்துள்ளது என்பதை பார்ப்போம்.

'கடாஅக் களிற்றின்மேல் கடபடாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்'

(குறள் 1087)

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் இந்த திருக்குறளின் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பாரத/தமிழ் குலப்பெண்கள் மேலாடை அணிந்து வந்துள்ளனர் என்பது புலனாகிறது. கி.பி.1000ம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர் ஆல்பெரூனி இந்திய பெண்கள், இருதுவாரம் கொண்ட கால்சட்டையை மார்பின் மேல் பகுதியில் அணிந்திருந்ததாக கூறியுள்ளார். மகத்தான விஜயநகர சாம்ராஜ்யத்தின் காலத்தில் பெண்கள் பருத்தி மற்றும் சில் நூலினால் செய்யப்பட்ட ஆடைகளை உடுத்தியிருந்தனர். அந்த ஆடைகள் 5 கஜம் நீளமானதாகவும், இடுப்பில் சுற்றப்பட்டு இடதுபக்க தோளில் முடிவடைவதாகவும் அனைத்து வரலாற்று ஆராச்சியாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். அடுத்து தலைமுடியை கோதி, உச்சியில் கொண்டை இட்டு, அதில் வாசனை மிகுந்த பூக்களை இட்டுக்கொண்டதாகவும், தங்கத்தினாலான மூக்குத்திகளும், தோடுகளும் பெண்களின் முகத்தினை அலங்கறித்தன என்று தரவுகள் கிடைக்கின்றன. இந்த காதனிகளை வடதமிழகத்தில் நாகபடம் என்றும் தென் தமிழகத்தில் பாம்பு படம் என்றும் மக்கள் அழைத்தனர்.

கன்னியாகுமரி நாடார் சமூக மக்களின் வரலாறு என்பது திருவிதாங்கூர்-மலபார் மக்களின் பன்பாட்டுடன் பின்னிப்பிணைந்திருப்பதை இன்றும் கூட பார்க்க முடியும். மலபார் பகுதியை சேர்ந்த நாயர் சமூகத்து பெண்கள் இன்றிலிருந்து ஐம்பது வருடங்களுக்கு முன்பு கூட இடுப்பில் ஒரு துண்டும், மேலே ஒரு துண்டும் (முண்டு) அணிந்து வந்துள்ளனர்.

இப்படிப்பட்ட கலாச்சார பின்னனியில் வாழ்ந்து மறைந்த இந்து பெண்களை, மேலாடை அணியாத, அறை நிர்வாண பெண்களாக 19ம் நூற்றாண்டில் சில காலம் வாழ்ந்துள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் என்ன?

வேறு யாருமல்ல கிருஸ்தவ மிஷனரிகள்தான்.

விஜயநகர சாம்ராஜத்தின் வீழ்ச்சிக்குப்பின் குளிர்விட்டுப்போன கிருஸ்துவ மிஷனரிகள் இந்திய மண்ணில் தங்கள் ஆட்டத்தை ஆடத்தொடங்கினார்கள். ஏற்கனவே கோவாவை கைப்பற்றியிருந்த போர்த்துகீசிய மிஷனரிகள் தங்கள் ஆதிக்கத்தை படிப்படியாக அதிகரித்து திருவிதாங்கூர்வரை கைப்பற்றினர். சுமார் 150 காலம் கோவா தொடங்கி திருவிதாங்கூர் வரை போர்த்துகீசிய மிஷனரிகள் ஆட்சி புரிந்தனர். போர்த்துகீசிய மிஷனரிகள் இந்துக்கள் மீது தங்களின் அதிகாரத்தை திணிக்கும் விதமாக ஆண்கள் முட்டிக்கு கீழே வேட்டியை தொங்கவிடக்கூடாது என்றும், பெண்கள் இடுப்புக்கு மேலே ஆடை அணியக்கூடாது என்றும் கட்டளை இட்டனர். பிறகு 19, 20ம் நூற்றாண்டுகளில் இந்த பகுதியின் ஆட்சி ஆங்கிலேயே மிஷனரிகளின் வசம் சென்றுவிட்டது.

ஆங்கிலேய கிருஸ்துவர்களும் ஏற்கனவே போர்த்துகீசிய மிஷனரிகளால் திணிக்கப்பட்ட இந்த நடைமுறையை கேரளாவில் பின்பற்றிவந்தனர். 19ம் நூற்றாண்டில் பிரிட்டானிய கவர்னராக திருவிதாங்கூரை ஆட்சி செய்த 'மன்றோ' என்பவர் நம்பூதிரி, நாயர், வேளாளர் ஆகிய சமூகத்தினருக்கும் சானார், பள்ளர், பறையர் முதலிய 18 சமூகத்தினருக்கும் இடையே பிரிவிணையை ஏற்படுத்தி சண்டை மூட்ட விரும்பினார்.அதற்கு ஏற்கனவே வழக்கில் இருந்த ஆடை விவகாரத்தை அவர் நைச்சியமாக பயன்படுத்திக்கொண்டார். திருவிதாங்கூர் ராஜயத்திற்கு 'பெயருக்கு' ராஜாவாக இருந்தவரிடம், 'மன்றோ' ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி உயர்சமுகத்தை சேர்ந்தவர்களாக கருதப்படும் பெண்கள் மற்றும் கிருஸ்தவர்களாக மதம்மாறிய தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்கள் மட்டும் மேலாடை அணிந்துக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் மூலம் கிருஸ்துவ மிஷனரிகள் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க திட்டம் போட்டனர். முதலில் இந்துக்களிடையே ஜாதி பிரிவிணையை ஏற்படுத்தி அவர்களுக்குள் பகைமையை மூட்ட முடியும். இதன்மூலம் இந்துக்களை ஒன்றிணையவிடாமல், நிம்மதியாக இந்தியாவை அடிமை படுத்த முடியும். அடுத்து மதம் மாறிய தாழ்த்தப்பட்ட பெண்கள் மட்டும் மேலாடை அணியலாம் என்று உத்தரவிட்டதன்மூலம் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களையும் மதமாற்ற முடியும். மதம் மாறிய மக்களை வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசமாகவும் ஆக்கிக்கொண்டனர்.

அந்த காலத்திலேயே மிஷனரிகளின் இந்த திட்டம் ஓரளவு வெற்றிப்பெற்றது. மிஷனரிகள் திட்டமிட்டு இந்துக்களை மேலாடை அணியவிடாமல் செய்ததோடு, இந்துக்களிடையே பகைமையையும் ஏற்படுத்திவிட்டு, மக்களையும் மதம் மாற்றினர். பிறகு அந்த பழியை உயர் சமூகம் என்று சொல்லப்படும் சமூகத்தின் மீது போட்டுவிட்டனர். உச்சகட்டமாக மக்களை உயர்சாதி – தாழ்ந்த சாதி என்று இந்து மதம்தான் பிரித்தது என்றும் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டனர். இன்றுவரை மிஷனரிகள் பரப்பிய இந்த பொய்தான் சமூகத்தில் பலராலும் நம்பப்பட்டு வருகிறது.

19ம் நூற்றாண்டில் இந்திய விடுதலைக்காக ஜான்சி ராணி, வேலுநாச்சியார் போன்ற இந்திய பெண்கள் பெரும் படைகளுக்கு தலைமை தாங்கி ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். ஆனால் அதே 19ம் நூற்றாண்டில் பிரிட்டனிலேயே வெள்ளைக்கார ஆண்கள், தங்கள் வீட்டுப்பெண்களை அடிமைகளாகத்தான் நடத்தினர். நாட்டில் எந்த வியாதி பரவினாலும், அதற்கு பெண்கள்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.அந்த சமூகத்திற்கு பல் துலக்குவது என்றால் என்ன? என்று கூட தெரிந்திருக்கவில்லை.

இப்படிப்பட்ட பிரிட்டிஷ் மிஷனரிகள் மற்றும் பாதிரியார்கள் இந்திய பெண்களை மேலாடை அணியாதவர்கள் என்றும், அதற்கு காரணம் இந்து மதம் என்றும் சொல்வது எப்பேர்ப்பட்ட பொய்? அன்று சூது, வாது புரிந்து இந்துக்களை மதமாற்றிய மிஷனரிகள் இன்று அதேபொய்யை திரும்பத்திரும்ப சொல்லி மதம்மாற்றுகின்றனர் என்பதுதான் நிஜம்!

– காசிவேலு, வரலாற்று ஆராய்ச்சியாளர்.

#காளிஇயக்கம்

Similar News