துக்ளக் தர்பார் படத்தின் பாடல் வெளியீடு குறித்து நியூ அப்டேட்.!

துக்ளக் தர்பார் படத்தின் பாடல் வெளியீடு குறித்து நியூ அப்டேட்.!

Update: 2020-08-03 11:08 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. அந்நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் துக்ளக் தர்பார் இந்த படத்தில் இவர் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது. அதனை அடுத்து இதுபற்றி புகைப்படங்கள் வெளியாகின.

இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடித்துவருகிறார்.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பார்த்திபன்,மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்து வருகிறார்.

அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் மீதான மிகப் பெரிய எதிர்பார்ப்பை அடுத்து படத்தின் முதல் சிங்கிள் டிராக் "அண்ணாத்த சேதி" என்ற பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுபற்றி விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Similar News