கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதார கணக்கெடுப்பு பணி தீவிரம்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதார கணக்கெடுப்பு பணி தீவிரம்..

Update: 2020-04-05 08:07 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டதை அடுத்து சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. மாவட்டம் முழுவதும் போலீசார் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு உள்ள. நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காய்பட்டணம்தோப்பு மற்றும் மணிகட்டி பொட்டல் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொது மக்கள் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஐந்து நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவருகிறது. எனவே கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுகாதார கணக்கெடுப்பு பணி முடிக்கிவிடபட்டுள்ளது .

இப்பணியை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாச்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்துவருகின்றனர். குருந்தன்கோடு ஒன்றிய பெருந்தலைவர் அனுசாதேவி, கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் கீழகட்டிமாங்கோடு பகுதியில் சுகாதார கணக்கெடுப்பு பணியை ஆய்வுசெய்தனர்

இந்நிலையில் கொரானா தொற்று பரவாமல் இருப்பதற்கு கவன குறைவாக இல்லாமல் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

Similar News