வாருங்கள் தெரிந்து கொள்வோம் ! அத்திமரத்தால் செய்த தெய்வங்கள் இத்தனை உள்ளதா !
வாருங்கள் தெரிந்து கொள்வோம் ! அத்திமரத்தால் செய்த தெய்வங்கள் இத்தனை உள்ளதா !;
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதர் சிலை அத்தி மரத்தால் ஆனது. அது போல் பல திருத்தலங்களில் அத்தி மரத்தால் ஆன தெய்வங்கள் காட்சி அளிக்கின்றன.
திருவண்ணாமலையில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் அம்மனின் உருவச்சிலை அத்தி மரத்தால் ஆனது.
உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது.
புபுதுச்சேரிக்கு அருகில் உள்ள வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரத்தை செங்கேணி அம்மன் சிலையாக வடித்து வழிபடுகிறார்கள். இந்த கிராமத்தில் நடைபெறும் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். பிரிட்டிஷ் காலத்தில் இருந்து புகழ் பெற்றது.
திருப்பதியில் தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளி காட்சி அளித்து உள்ளார்.
மயிலாடுதுறையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கோழிகுத்தி என்ற கிராமத்தில் வானமுட்டிப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு திருத்தலத்தின் மூலவர் அத்தி மரத்தால் ஆனது 15 அடி உயர திருவுருவச்சிலை.
சங்கு, சக்கரம், கதை, அபயசீதம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமி விளங்க சேவை சாதிக்கிறார். பெருமாள் விஸ்வரூபமாக இருந்ததால் ‘வானமுட்டிப் பெருமாள்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். இக்கிராமத்தின் இயற்பெயர் ‘பாப விமோசனபுரம்’ என்பதாகும்.
அத்தி மரத்தின் சிறப்பம்சங்கள்
அத்தி, ஆறாவது கிரகமான சுக்ரனின் அம்சமாகக் கருதப்படுகிறது.
வேலூரின் அருகில் பொன்னை, விநாயகபுரத்தில் நவக்கிரகங்களுக்கு என தனியாக ஒன்பது வகையான ஆலயங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆலயத்தின் பெயர் ஸ்ரீ நவக்கிரக கோட்டை ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு சுக்ரனை வணங்குவதற்காக அத்தி மரமும் நடப்பட்டுள்ளது. அசுர குரு சுக்ராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.