தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவும் தீவிரம் குறைந்துள்ளது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவும் தீவிரம் குறைந்துள்ளது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!

Update: 2020-04-16 11:07 GMT

முதல்வா் பழனிசாமி இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் காணொலி வழியாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் அவா் ஆலோசனை நடத்தினார் கூட்டத்துக்குப் பிறகு, சில முக்கிய முடிவுகள் குறித்து தற்போது முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு 12 குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவும் தீவிரம் குறைந்துள்ளது.

அரசின் தீவிர நடவடிக்கைகளால் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது. உயிர்பலியை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாள்களில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து விடும் என்றார் .

சிவப்பு பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும். 15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்துள்ள மாவட்டங்கள் சிவப்பு பகுதிக்குள் வரும். தமிழகத்தில் நோய்த்தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றார்.

ரம்ஜான் நோன்பு காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து அரசு ஆலோசிக்க உள்ளது. தமிழக தலைமை காஜியுடன், தலைமைச் செயலாளர் வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.

ஏப்.20-ஆம் தேதிக்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்றார். 

Similar News