பாடகர் எஸ்.பி.பி யின் பேரிடர் கால பங்களிப்பு - குவியும் பாராட்டுக்கள்.! #covid19 #spb #singerspb

பாடகர் எஸ்.பி.பி யின் பேரிடர் கால பங்களிப்பு - குவியும் பாராட்டுக்கள்.! #covid19 #spb #singerspb

Update: 2020-06-22 07:14 GMT

பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் கொரோனோ கால நிவாரண பங்களிப்பிற்க்கு அணைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கொரோனோ பரவல் காரணமாக ஊரடங்க மற்றும் அதனை தொடர்ந்த பொருளாதார மந்தநிலை போன்றவைகளால் மக்கள் துன்பப்படும் வேளையில் அனைவரும் தங்களால் முடிந்த அளவு உதவி செய்து வருகின்றனர். இதில் பாடகர் எஸ்.பி.பி அவர்கள் தன்னால் முடிந்த அளவு தன் இசை ரசிகர்களின் மூலம் தன் பாடலால் திரட்டிய நிதியின் மூலம் அரசாங்கத்திற்க்கு தன் பங்களிப்பை செய்துள்ளார். ஆன்லைன் மூலம் தனது பாடல்களில் அதனை செய்துள்ளார்.

'லிசனர்ஸ் சாய்ஸ்' என்று பெயரிடப்பட்ட நிகழ்ச்சி மூலம் 17 லட்சத்திற்கும் கூடுதலான தொகை, மேலும் சில இசைக் கலைஞர்கள் அப்படி வசூலித்த 3 லட்ச ரூபாய் சேர்த்து 20 லட்ச ரூபாயை நன்கொடையாக திரட்டியதாக எஸ்பிபி இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவித்துள்ளார்.

அந்தத் தொகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாயும், மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள இசைக் கலைஞர்களுக்கு 12 லட்ச ரூபாய் வரை நிவாரணத் தொகையாகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காக 80 ஆயிரம் ரூபாயும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதனால் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Similar News