அடிப்படை புரிதல் கூட இல்லாத கம்யூனிஸ்ட்டுகள் - இந்திய வணிகர்களை நசுக்கி சீனாவின் வயிறு வளர்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட சொல்லி நிர்பந்தம்!

அடிப்படை புரிதல் கூட இல்லாத கம்யூனிஸ்ட்டுகள் - இந்திய வணிகர்களை நசுக்கி சீனாவின் வயிறு வளர்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட சொல்லி நிர்பந்தம்!

Update: 2019-11-07 14:48 GMT

குறிப்பிடத்தக்க நிலுவையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை RECP ஒப்பந்ததில் கையெழுத்திடுவதை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட மற்ற 15 நாடுகளும் 2020 ம் ஆண்டில், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே  16 நாடுகளுக்கு இடையே ஒரு “ஒருங்கிணைந்த சந்தையை” உருவாக்குவது என்பதாகும். அதாவாது, ஒவ்வொரு நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களும், சேவைகளும் தங்கு தடையுமின்றி மற்ற 15 நாடுகளிலும் கிடைக்க வழி செய்யப்படும்.


இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, சீனாவில் இருந்து மிகவும் மலிவு விலையில் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சூழல் உருவாகும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சீன பொருட்கள் இறக்குமதி ஆகும்போது, உடனடியாக அந்த பொருட்களின் மீது இறக்குமதி வரி விதிக்கப்படும் செயல்முறையை இந்த ஒப்பந்தத்திற்குள் கொண்டுவரவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை இடம் பெற வில்லை. இதனால் தான் பிரதமர் மோடி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இந்த முடிவினை இந்திய விவசாயிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெகுவாக வரவேற்றுள்ளன.


மலிவான சீன பொருட்களால் இந்தியாவில் வேளாண்மை, ஜவுளி போன்ற முக்கிய வேலைவாய்ப்பு துறைகளில் உள்நாட்டு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதனை உணர்ந்தே பிரதமர் மோடி தலைமையிலான அரசு 15 நாடுகளின் எதிர்பார்ப்பையும் தாண்டி அதில் இணைய மறுத்துள்ளது.


ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அடிப்படை புரிதல் கூட இன்றி, ஏன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள் தாய் நாட்டுக்காக குரல் கொடுக்கிறார்களா.? இல்லை தங்கள் இனமான சீன கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு ஒப்பந்தமும், தீவிர ஆலோசனைக்கு பின்னரே அவற்றின் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் சாதக, பாதக நிலவரங்கள் அறிந்த பின்பே கையெழுத்திடப்படுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சியினர் சொல்வதை போல எடுத்தோம், கவிழ்த்தோம் என்று மேற்கொள்ளப்படுவது அல்ல. இதனை புரிந்து கொண்டாலே அரசின் மீது முன்வைக்கப்படும் பல வீண் விமர்சனங்கள் தடுக்கப்படும்.



Similar News