டெல்லி ஆனந்த் விஹார் சம்பவம் மற்றும் நிஜாமுதீன் சம்பவம் இரண்டும் எனக்கு கவலை அளித்தன : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவர்னர்களிடம் உருக்கம்

டெல்லி ஆனந்த் விஹார் சம்பவம் மற்றும் நிஜாமுதீன் சம்பவம் இரண்டும் எனக்கு கவலை அளித்தன : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவர்னர்களிடம் உருக்கம்

Update: 2020-04-04 09:15 GMT

நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுடன் இணைந்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: டெல்லி ஆனந்த்விஹார் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் திரளாக கூடியது மற்றும் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்ளிகி ஜமாத் மாநாடு ஆகிய இரண்டும் தலைநகரில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்திய விவகாரம் என்றும் இந்த சம்பவங்கள் தனக்கு கவலை அளிக்கிறது என்றும் கூறினார்.

தேசிய அளவிலான ஊரடங்கில் எந்த ஒரு நபரும் பட்டினி கிடக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்தில் வீடற்றோர், வேலைவாய்ப்பற்றோர் மற்றும் நலிந்த பிரிவினரின் தேவைகள் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தேவைப்படுவோருக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்தும் அதேவேளையில் சமூக இடைவெளியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதில் எந்த சமரசத்துக்கும் இடமளிக்கக் கூடாது. நாட்டின் சில பகுதிகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் போலீஸார் தாக்கப்பட்ட சம்பவங்கள் முகவும் கவலை அளிப்பதாகவும், மாநில நிர்வாகங்கள் இந்திய அரசின், மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் செல்வதை கவர்னர்கள் உற்று நோக்க வேண்டும் என்றும் ராம்நாத் பேசினார்.

Similar News