டெல்லி சுகாதார அமைச்சருக்கு திடீரென ரத்தத்தில் குறைந்த ஆக்ஸிஜன் அளவு - கொரோனா அறிகுறியோடு மருத்துவமனையில் அனுமதி!

டெல்லி சுகாதார அமைச்சருக்கு திடீரென ரத்தத்தில் குறைந்த ஆக்ஸிஜன் அளவு - கொரோனா அறிகுறியோடு மருத்துவமனையில் அனுமதி!

Update: 2020-06-16 07:35 GMT

டெல்லி சுகாதார அமைச்சர்சத்யெந்தர் ஜெயினுக்கு திங்கள்கிழமை (ஜூன் 15) இரவு அதிக காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாகும். அதனால்தான் ஜெயின் மாதிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா சோதனைக்கு எடுக்கப்பட்டது. சோதனை முடிவு இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்யெந்தர் ஜெயினுக்கு இன்னும் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.

இது தொடர்பாக வெளியான ட்விட்டர் பதிவில் "உயர் காய்ச்சலை தொடர்ந்து நேற்றிரவு திடீரென என் உடலில் ஆக்ஸிஜன் அளவு வீழ்ச்சியடைந்ததால் நான் ஆர்ஜிஎஸ்எஸ்ஹெச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களில் ஜெயின் பல கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, பல்வேறு பத்திரிகையாளர் சந்திப்புகளில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.






Similar News