உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தியா, 100 டன் மருத்துவ கருவிகளை தபால்துறை மூலம் டெலிவரி.!

உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தியா, 100 டன் மருத்துவ கருவிகளை தபால்துறை மூலம் டெலிவரி.!

Update: 2020-04-18 05:51 GMT

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி விதித்துள்ளது.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்தியா முழுவதும் 100டன் மதிப்பிலான மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகளை தபால்துறை மூலம் பட்டுவாடா செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனைப் பற்றி மத்திய உள்துறை இணை செயலாளர் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்: இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் 100டன் மதிப்பிலான மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட பல கருவிகளை மருத்துவமனைகளுக்கு வாகனங்கள் மற்றும் விமானம் மூலமாக தபால் துறை பட்டுவாடா செய்கிறது.

இந்திய போஸ்ட், பணம் வழங்கும் வங்கிகளின் கீழ் மத்திய அரசின் திட்டத்தை உபயோகிக்கும் பயனாளிகளுக்கு சேர வேண்டிய பணத்தை வழங்குவதற்காக நாடு முழுவதும் 2 லட்சத்து தபால்காரர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். மேலும் ஓய்வூதியம் உளப்பட அரசின் திட்டத்தின் கீழ் இருக்கும் பணியாளர்களுக்கு வீடு தேடி வழங்குவதற்காக அமைச்சகம் பல நடவடிக்கை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.  

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2523257

Similar News