விநாயகர் ஊர்வலத்தில், ஆம்புலன்சிற்கு வழி ஏற்படுத்திய பக்தர்கள் - வைரலானது வீடியோ!!
விநாயகர் ஊர்வலத்தில், ஆம்புலன்சிற்கு வழி ஏற்படுத்திய பக்தர்கள் - வைரலானது வீடியோ!!;
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி சாலையில் நேற்று விநாயகர் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான விநாயகர் சிலைகள் எடுத்து செல்லப்பட்டன. பக்கதர்கள் கூட்டம் சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து வந்னர்.
விநாயகர் விசர்சன ஊர்வலம் சென்றுகொண்டிருந்த போது, அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அந்த ஆம்புலஸ் கடந்து செல்வதற்கு வசதியாக பக்தர்கள் கட்டுப்பாடுடன் வழிவிட்டு விலகினர். அதோடு ஆம்புலன்ஸ் வேகமாக செல்வதற்கு வசதியாக பல பக்தர்கள், ஆம்புலன்சின் முன் ஓடியவாறே அதற்கு வழி ஏற்படுத்தினர்.
அப்போது அருகில் உள்ள கட்டிடத்தின் மாடியில் நின்ற ஒருவர் இந்த காட்சியை படம்பிடித்து அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.
விநாயகர் ஊர்வலத்தின்போது, ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கட்டுப்பாடுடன் நடந்துகொண்ட பக்தர்களை அனைத்து தரப்பினரும் பராட்டி வருகின்றனர்.