இந்திய அணியில் டோனிக்கு பிடித்த வீரர் இவர்தானம் - யுவராஜ்சிங் சொல்கிறார்.!

இந்திய அணியில் டோனிக்கு பிடித்த வீரர் இவர்தானம் - யுவராஜ்சிங் சொல்கிறார்.!

Update: 2020-04-20 07:22 GMT

2011ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலக கோப்பையை வென்றது. அதில் சிறப்பாக விளையாடியவர் யுவராஜ் சிங். அந்தத் தொடரில் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் அவர் தொடர் நாயகனாக தேர்வு அடைந்தார்.

அந்த உலககோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி. அவர் இந்திய அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

ஒரு டிவி சேனலுக்கு யுவராஜ் சிங் பேட்டி கொடுத்தார்: அதில், அவர் கூறியது: சுரேஷ் ரெய்னாவுக்கு அதிகமான அளவில் ஆதரவு இருந்தது. ரெய்னாவுக்கு டோனி நெருக்கமாக இருந்தார். எந்த ஒரு கேப்டனுக்கும் அணியில் பிடித்த வீரர் ஒருவர் இருப்பார். அதில் டோனிக்கு சுரேஷ் ரெய்னா இருந்தார்.


அந்த உலக கோப்பையில் ஆல்ரவுண்டரான யூசுப் பதான் சிறப்பாக விளையாடினார். மேலும் நானும் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்து விக்கெட்களை வீழ்த்தினேன். அந்த சமயத்தில் இந்திய அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் யாருமில்லை. அப்போது நான் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை எடுத்ததால் என்னை தேர்வு செய்தனர்.

மேலும் எனக்கு பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலி. எனக்கு ஆதரவு அளித்தார். இளம் வீரர்களுக்கு திறமை வளர்ப்பதில் மிக முக்கியத்துவம் காட்டுவர் என்று யுவராஜ்சிங் கூறினார்.


Similar News