முகவரி எல்லாம் கட் - ஒரே கிளிக்கில் மொத்த இந்தியாவும் ஒரே குடையின் கீழ் - வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் அடுத்த அதிரடி திட்டம்.!

முகவரி எல்லாம் கட் - ஒரே கிளிக்கில் மொத்த இந்தியாவும் ஒரே குடையின் கீழ் - வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் அடுத்த அதிரடி திட்டம்.!

Update: 2019-08-23 03:59 GMT

தகவல் தொழில்நுட்பப் புரட்சி மனிதர்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட வீடுகளை எளிதில் அடையாளம் காணுவது, அந்த வீடுகளுக்கு தேவைப்படும் நேரத்தில் அரசு சார்பிலான உதவிகள் விரைவாக கிடைக்க செய்வது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு அரசுத் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் பயன்படுத்தும் வகையில் மின்னணு கதவு எண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


'பைலட் திட்டம்' என்ற பெயரில் அஞ்சல் துறை சார்பில் மேப் மை இந்தியா என்ற நிறுவனம் செயல்படுத்தும் திட்டத்தின்படி, நாடு முழுதும் உள்ள அசையா சொத்துகளுக்கு மின்னணு முறையில் விலாசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றிற்கு 3 இலக்க பின்கோட்டை சேர்த்து, 6 இலக்க ஆல்பா நியூமரிக் டிஜிட்டல் குறியீடு வழங்கப்படும்.


இவ்வாறு அசையா சொத்துகளும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டதும், அவற்றின் பெயர், உரிமையாளர் பெயர், வரி விவரங்கள், மின்சாரம், குடிநீர் மற்றும் காஸ் குறித்த விவரங்களும் அதனுடன் சேர்க்கப்படும். இதன் மூலம் அனைத்து விவரங்களும் ஒற்றை தளத்தில் கொண்டு வர முடியும். இந்த 6 இலக்க குறியீட்டை கூகுள் மேப்பில் பதிவிட்டால், அது செல்ல வேண்டிய இடத்தை தெளிவாக காட்டிவிடும்.


மின்னணு முறையில் இடங்களை தேடுவது என்பது, சுற்றுலா பயணிகள் மற்றும் பல இடங்களுக்கு செல்பவர்களுக்கு பெரிதும் உதவும். அவர்கள் குறிப்பிட்ட இடங்களை தேடவும், பகிர்ந்து கொள்ள பயன்படுவதுடன், பணம், நேரம், எரிபொருள் வீணடிப்பு குறைக்கப்படும்.


திட்டத்தின் சிறப்பம்சம்:


ஜி.பி.எஸ். மூலம் செயல்படும் மின்னணுக் கதவு எண் முறையை பயன்படுத்தி தீ விபத்து, மருத்துவ உதவி தேவை போன்ற அவசர காலங்களில் சேவை வழங்குவோர் தங்கள் மொபைல்போன் மூலம் அந்த வீட்டின் படம், வீடு அமைந்துள்ள வீதி, உரிமையாளரின் பெயர், தற்போதைய நிலை ஆகியவற்றை பார்த்து சரியான நேரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் அங்கு சென்று சேர முடியும்.


இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டு விலாசத்தை மிக நீளமாக எழுதி கொடுக்க தேவையில்லை. மின்னணு கதவு எண் முறையில் குறிப்பிட்ட வீட்டிற்கு கொடுக்கப்படும் 9 எண்களை மட்டும் எழுதினால்போதும். அதன்மூலம் தபால், கொரியர், மருத்துவ உதவிகள் ஆகியவை நேரடியாகவே வீட்டுக்கு வந்து சேரும். மேலும் வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை மின்னணு கதவு எண் முறையில் வழங்கப்படும் 9 எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் செலுத்தலாம். ஆக மொத்தத்தில் மின்னணு கதவு எண் முறையில் வழங்கப்படும் 9 எண்கள் இனிமேல் நமது விலாசமாகவே திகழும்.


Similar News