#FakeNews போலி செய்தியை பதிவிட்டு, சுட்டிக்காட்டிய பின் நீக்கிய தினகரன்

#FakeNews போலி செய்தியை பதிவிட்டு, சுட்டிக்காட்டிய பின் நீக்கிய தினகரன்

Update: 2019-09-15 08:24 GMT

மோட்டார் வாகன சட்ட திருத்தம் குறித்து போலி செய்தியை பதிவிட்டு பின்பு நீக்கியுள்ளது தினகரன். மோட்டார் வாகன சட்ட திருத்ததின் கீழ் நாகலாந்தை சேர்ந்த லாரி ஒன்றிற்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலி செய்தியை வெளியிட்டது தினகரன்.



Screenshot of deleted tweet


மோட்டார் வாகன சட்ட திருத்தம் செப்டம்பர் மாதம் முதல் தான் அமலுக்கு வந்தது. ஆனால், செய்தியில் குறிப்பிடப்பட்ட அபராத ரசீது ஆகஸ்ட் மாதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போலி செய்தியை சுட்டிக்காட்டிய தமிழக பா.ஜ.க ட்விட்டரில் பதிவிடுகையில், "வெறுப்பு அரசியலை முன்னெடுக்க தி.மு.க சார்பு ஊடகத்தின் பொய் செய்தி


செப். சட்டத்தை குற்றம் சொல்ல ஆகஸ்ட் ரசீது


பெர்மிட், இன்சூரன்ஸ், FC இல்லை, ஆட்கள் ஏற்றி வந்தது, 2014 முதல் 6.5லட்சம் வரிபாக்கி என எண்ணற்ற குற்றங்கள்


மக்களை திசைதிருப்ப திமுகவின் உத்தி படுகேவலம்", என்று பதிவிட்டுள்ளது.




https://twitter.com/BJP4TamilNadu/status/1173135797114961921?s=19


தமிழக பா.ஜ.க-வின் இந்த ட்விட்டர் பதிவை அடுத்து தினகரன் நாளிதழ் அந்த போலி செய்தியை அமைதியாக நீக்கிவிட்டது. போலி செய்தி பதிவிட்டதற்கான விளக்கமோ அல்லது மறுப்போ பதிவிடவில்லை. தினகரன் வெளியட்ட போலி செய்திக்கு பயன்படுத்தப்பட்ட ரசீது, ஆகஸ்ட் மாதத்தில் கொடுக்கப்பட்டது.





மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு முன்பு என்ன அபராத தொகை விதிக்கப்பட்டதோ அதே அபராத தொகை தான் தினகரன் வெளியிட்ட போலி செய்தியின் ரசீதில் உள்ளது. சாலை விதிகளை மீறியதற்கு 500 ரூபாய், காப்பீடு இல்லாமல் ஓட்டியதற்கு 1000 ரூபாய் போன்ற முன்பு இருந்த அபராத தொகை தான் அந்த ரசீதில் உள்ளது. ஆனால், 5 ஆண்டுகளாக வரி காட்டாமல் இருந்ததற்கு கிட்டத்தட்ட 6,40,500 ரூபாய் வரை அபரதமாக ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக வரி காட்டாமல் ஓட்டிய குற்றத்தை பற்றி பேசாமல், சற்றும் சம்மந்தம் இல்லாமல், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தூற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தினகரன் வெளியிட்ட போலி செய்தியை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


Similar News