சென்னை-விளாடிவோஸ்டோக் இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து ! இரஷ்யாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடனுதவி!! பிரதமர் மோடி அறிவிப்பு!!

சென்னை-விளாடிவோஸ்டோக் இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து ! இரஷ்யாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடனுதவி!! பிரதமர் மோடி அறிவிப்பு!!

Update: 2019-09-06 05:23 GMT

ரஷியாவின் தூர கிழக்கு பிராந்தியத்தின் மேம்பாட்டுக்காகவும், அங்கிருந்து  சென்னை-விளாடிவோஸ்டோக் இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கவும் இந்தியா சார்பில் 100 கோடி டாலர் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) கடனுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


பிரதமர் மோடி, ரஷியாவில் தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். அந்நாட்டின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்குப் பொருளாதாரக் குழுவின் 5-ஆவது கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 ரஷியாவின் தொலை கிழக்குப் பிராந்தியத்துடன் இந்தியாவின் தொடர்பு, வெகு காலத்துக்கு முற்பட்டது. விளாடிவோஸ்டோக்கில் தூதரகம் அமைத்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவை சேரும். இப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக, இந்தியா ரூ.7 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கவுள்ளது. இதனால் இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வளரும்.


 சென்னை-விளாடிவோஸ்டோக் துறைமுகங்கள் இடையே சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பிறகு, வடகிழக்கு ஆசியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக விளாடிவோஸ்டோக் உருவெடுக்கும். இது, இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் என்றார் மோடி. இரஷ்யாவுடன் 15 புதிய வர்த்தக, தொழில் ஒப்பந்தங்களில் பங்கேற்ற அவர் நேற்றுடன் இரஷ்யப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்து சேர்ந்தார்.


Similar News