பொங்கிய உதயநிதி - பம்மிய ஸ்டாலின்.! #dmk

பொங்கிய உதயநிதி - பம்மிய ஸ்டாலின்.! #dmk

Update: 2020-06-20 09:31 GMT

இந்திய சீன எல்லைப்போரில் நாட்டில் அனைத்து குடிமக்களின் ஒருமித்த கருத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதில் இருப்பதில் ஐயமில்லை, ஆனால் ஒருசிலரின் எண்ண ஓட்டங்கள் அதற்கு எதிர்மாறாக இருப்பது இந்திய தேசத்தின் சாபக்கேடு. இது இவ்வாறாக இருக்கையில் நேற்று தமிழ்நாட்டில் தன்னை ஆகப்பெறும் கட்சியாக காட்டிக்கொள்வதில் இருந்து, தனது குடும்ப கட்சியை தமிழ்நாட்டின் மீட்பராக காட்டிக்கொள்ள துடிக்கும் திமுக'வின் மனநிலையோ எந்தவிதத்திலும் சேர்த்துக்கொள்ள முடியாத நிலையாகும்.

நேற்று பாரத பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நாடு எல்லை பிரச்சினை தொடர்பான விஷயத்தில் சீனா'வுடன் போர் பதட்டத்தில் இருக்கும் சூழலில் பிரதமர் மோடி அனைத்து தரப்பினரையும் அணைத்து செல்ல வேண்டும் அனைவரின் கருத்தும் முக்கிம் என்ற நோக்குடன் அனைத்து கட்சி கூட்டத்திற்க்கு ஏற்பாடு செய்திருந்தார். இது நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

இதற்கு முன் காலையில் இருந்தோ உதயநிதியின் ட்விட்டர் கணக்கும் இந்திய சீன எல்லை போல் பரப்பரப்பாக இருந்தது,"1960'க்கு பிறகு வீரர்களிடம் நேரடி மோதல் இல்லை எனவும்" (அது 1962'ம் வருடத்தை 1960 என மாற்றி உளறினார் என்பது தனிக்கதை)", "ராணுவ ஒழுங்கை" பற்றியும், "தேசம் ராணுவ வீரர் பின்னால் நிற்கிறது பா.ஜ.க பின்னால் அல்ல" எனவும் பீரங்கி முழக்கம் போல் வெடித்தன.

இதனால் மாலை நடைபெறும் அணைத்து கட்சி கூட்டத்தில் அவரின் கருத்தை அப்படியே எதிரொலிப்பார் என அனைத்து அரசியல் சார்ந்த தரப்பினரால் பெரிதும் எதிர்நோக்கப்பட்டது. ஆனால், மாலையோ நடந்தது வேறுவிதம். திமுக தலைவரும் காலையில் பீரங்கி முழக்கமாக முழங்கிய உதயநிதியின் தகப்பனாருமான ஸ்டாலினின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகான கருத்துக்கள் அப்படியே எதிர் ரகம். "பிரதமர் நரேந்திரமோடி அவர்களை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை" என ரத்தின சுருக்கமாக முடித்துக்கொண்டார். இது உதயநிதிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அதிர்ச்சியே.

காலையில் வெடித்த மகனின், கருத்துக்கள் மாலையில் வெளிவரும் தந்தையின் கருத்துகள் இரண்டும் மக்களை குழப்பும் விதமாகவே உள்ளது. மகனோ "பா.ஜ.க வின் பின்னால் தேசம் இல்லை" என்கிறார், தந்தையோ "நரேந்திரமோடி ஆதரிப்பதில் எந்தவித தயக்கம் இல்லை" என்கிறார். எனவே இது மக்களை மக்களை குழப்பி அரசியல் செய்யும் செயலா? இல்லை பொதுவெளியில், சமூக வலைதளத்தில் வாய்ப்பு கிடைக்கும் பொழுது பீரங்கியாய் வெடித்து விட்டு பேச வாய்ப்பு வரும்பொழுது பம்மி பதுங்குவது என்ன விதமான அரசியல் என திமுக'தான் பதில் கூறவேண்டும்.

Similar News