இந்து தெய்வங்களை இழிவு படுத்தும் தி.மு.க கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்டு வராதீர்கள்! - பழனியில் வீடு வீடாக போஸ்டர்!

இந்து தெய்வங்களை இழிவு படுத்தும் தி.மு.க கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்டு வராதீர்கள்! - பழனியில் வீடு வீடாக போஸ்டர்!

Update: 2019-12-30 04:54 GMT


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன், கி.வீரமணி, முத்தரசன், பாலகிருஷ்ணன், வைகோ போன்றவர்கள் தொடர்ந்து இந்துக்களையும் இந்து மத வழிபாட்டு முறைகளையும் கொச்சைப் படுத்தியும், கேவலமாக பேசியும் வருகின்றனர். தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்பட எந்த இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல மாட்டார்கள்.


ஆனால் ரம்ஜான் பண்டிகையின்போது தலையில் குல்லா அணிந்து கொண்டு ரம்ஜான் கஞ்சி குடிப்பதும், கிறிஸ்மஸ் பண்டிகையின்போது கிறிஸ்தவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடுவதையும், ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைவரும் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இவர்கள் கிறிஸ்மஸ் வாழ்த்து, ரம்ஜான் வாழ்த்து உள்பட அனைத்து வாழ்த்துக்களையும் தவறாமல் தெரிவித்து வருகின்றனர்.


சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்பது அனைவருக்கும் பொதுவான பதவி. அந்தப் பதவியில் இருக்கின்ற திமுக தலைவர் ஸ்டாலின், இதுவரை அனைத்து மதத்திற்கும் பொதுவானவராக நடந்துகொண்டதில்லை. எப்போதுமே இந்துக்களின் விரோதியாகதான் அவர் செயல்பட்டு வந்துள்ளார். அது மட்டுமல்ல, அவரது கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன், கி.வீரமணி, வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரும் இதைத்தான் செய்து வருகின்றனர். இந்துக்களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன்தான் பார்க்கின்றனர்.


இதனால் ஆத்திரமடைந்த ஹிந்துக்கள், திமுகவுக்கும், அதனோடு கூட்டணி வைத்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.


இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை புறக்கணிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் ஒவ்வொரு இந்துக்களும் தங்களின் வீட்டின் முன்பு ஒரு பரபரப்பு போஸ்டரை ஒட்டி உள்ளனர்.
அந்த போஸ்டர்களில், “நான் வணங்கும் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் திமுக கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்டு வராதீர்கள். எனது ஓட்டும், எனது குடும்பத்தார் ஓட்டும் இந்துக்களை மதிப்பவர்களுக்கே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த போஸ்டர் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.


இதனால் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை தழுகும் நிலையில் உள்ள திமுக கூட்டணி கட்சியினர், இப்போது மிகக் கேவலமான தோல்வியை சந்திப்பார்கள் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.




https://www.youtube.com/watch?v=oVmyVl1e6Po



Similar News