பெண் சுகாதார அதிகாரிகளை இழிவாக பேசி மிரட்டிய தி.மு.க பிரமுகர் இஸ்மாயில் - கொரோனா கணக்கெடுப்பு பணியின்போது அட்டூழியம்!

பெண் சுகாதார அதிகாரிகளை இழிவாக பேசி மிரட்டிய தி.மு.க பிரமுகர் இஸ்மாயில் - கொரோனா கணக்கெடுப்பு பணியின்போது அட்டூழியம்!

Update: 2020-04-06 07:38 GMT

கொரோனா பாதிப்பு குறித்த கணக்கெடுப்புக்கு சென்ற சுகாதார அதிகாரிகளை மிரட்டிய திமுக பிரமுகரான இஸ்மாயிலை கோவை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள், கொரோனா பாதிப்புள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோவையில் உள்ள சில வீடுகளுக்கு சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி மைய ஊழியர்கள் சென்று காய்ச்சல் மற்றும் சளி உள்ளதா? என்ற பரிசோதனை செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை கரும்புக்கடை அருகே 3 பெண் சுகாதார துறை மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கணக்கெடுப்பிற்கு சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் இஸ்மாயில் என்பவர் பெண் ஊழியர்களை அவதூறாக பேசி, அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டி உள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் சங்கீதா என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து கோவை சாரமேடு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் இஸ்மாயில் என்பவரை போத்தனூர் காவல்துறையினர் கைது செய்தனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், நோயை பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News