பதவி வேணுமா அப்போ இதான் ரூல்ஸ் ! உடன்பிறப்புகளின் பகீர் போஸ்டர் !

Breaking News.

Update: 2021-09-10 15:45 GMT

பொதுவாக ஆடு, மாடுகள் விற்பனைக்கு அல்லது பொருட்கள் விற்பனைக்கு என சுவரோட்டி விளம்பரங்கள் பார்த்திருப்போம் ஆனால் மதுரையில் திமுக கட்சி பதிவிகள் விற்பனைக்கு என்ற வித்யாசமான சுவரோட்டியை அடித்து டிரெண்டாகியுள்ளனர் உடன் பிறப்புகள்.

ஆம், மதுரை மாவட்ட உடன்பிறப்புகள் தான் இந்த காரியத்தை செய்த்தது. அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என விசாரிக்கும் போது தான் மதுரை மாவட்ட தலைமையின் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அந்த போஸ்டரில் பதவிக்கு இவ்வளவு என பணம் மதிப்பு போட்டது மட்டுமின்றி குண்டாஸ் வழக்கு இருந்தால் தான் பதவி எனவும் போடப்பட்டுள்ளது. அதன் கீழ் உண்மை தொண்டர்கள் என்ற வாசகமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது.

கட்சியில் உண்மையாக உழைத்தால் பதவி மற்றும் அதிகாரம் கிடைக்காத விரக்தியில் உடன் பிறப்புகள் செய்த இந்த காரியம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் தலைமையின் கவனம் பெற வேண்டும் என ஒட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

Source: News 18 Tamil

Tags:    

Similar News