இந்தியாவில் அதிக சொத்துகள் வைத்திருக்கும் மாநிலக் கட்சி 2ஆம் இடத்தில் திமுக! திமுக- வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது!!

இந்தியாவில் அதிக சொத்துகள் வைத்திருக்கும் மாநிலக் கட்சி 2ஆம் இடத்தில் திமுக! திமுக- வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது!!

Update: 2019-10-10 11:16 GMT

இந்தியாவில் அதிக சொத்துக்கள் வைத்துள்ள மாநில கட்சிகளில் பணக்கார கட்சியாக உத்தரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சி ரூ.583.28 கோடி சொத்து
 மதிப்புகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தின் திமுக கட்சி ரூ.191.64 கோடி சொத்து மதிப்புகளுடன் இரண்டாவது பணக்கார கட்சியாகவும் அதிமுக ரூ. 189.54 கோடி சொத்து மதிப்புகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.


மாநில கட்சி பட்டியலில் திமுக. 2-வது இடத்திலும், அதனைதொடர்ந்து 3-வது இடத்தில் அதிமுகவும் அங்கம் வகிக்கின்றன. 2016-17-ம் ஆண்டு திமுக.வின் சொத்து மதிப்பு ரூ.183.36 கோடியாக இருந்தது. 2017-18-ம் ஆண்டு ரூ.191.64 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2016-17-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017-18-ம் ஆண்டு திமுக.வின் சொத்து மதிப்பு 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது.அதிமுகவின் சொத்து மதிப்பு கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.187.72 கோடியாக இருந்தது. மாநில கட்சிகளின் அதிக சொத்து மதிப்புடைய பட்டியலில் முதலாவது இடத்தையும் பிடித்தது.


தற்போது அதிமுகவின் சொத்து மதிப்பு 2017-18-ம் ஆண்டு ரூ.189.54 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-18-ம் ஆண்டு பணக்கார மாநில கட்சி பட்டியலில் அதிமுக.வை பின்னுக்கு தள்ளி, திமுக. முந்தியிருக்கிறது.


Similar News