அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பிடி வாரண்ட் பிறப்பித்த ஈரான் - 'தீவிரவாத' குற்றச்சாட்டை எதிர்கொள்கிறாரா? #DonaldTrump #Iran #Arrest

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பிடி வாரண்ட் பிறப்பித்த ஈரான் - 'தீவிரவாத' குற்றச்சாட்டை எதிர்கொள்கிறாரா? #DonaldTrump #Iran #Arrest

Update: 2020-06-30 01:27 GMT

இஸ்லாமிய குடியரசு நாடான ஈரான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், ஜனவரி மாதம் ஈரானின் உயர்மட்ட தளபதி காசெம் சோலைமணி கொல்லப்பட்டதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பங்களிப்புக்காக இன்டர்போலின் உதவியை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டின் பாதி-அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் ஃபார்ஸ் இன்று (ஜூன் 29) தெரிவித்துள்ளது.

ஜனவரி 3 அன்று, ஜெனரல் காசெம் சோலைமானியைக் கொல்ல நடந்த தாக்குதலில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாகவும் அதற்காகவே இந்த பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெஹ்ரான் வழக்கறிஞர் அலி அல்காசிமெர் இன்று (ஜூன் 29) கூறினார். இதன் அடிப்படையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் "கொலை மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை" எதிர்கொள்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி பதவிகாலம் முடிவடைந்த பின்னரும் ஈரான் அவர் மீதான தனது வழக்கைத் தொடரும் என்றும் அல்காசிமெர் கூறினார்.

ஜெனரல் காசெம் சோலைமானி ஈரானின் எலைட் ராணுவமான கட்ஸ் படையின் தளபதி ஆவார். அவை துணை ராணுவ இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டுப் பிரிவாகும். டிரம்ப் நிர்வாகம் அவரை ஒரு பயங்கரவாதி என்று முத்திரை குத்தியது, ஈராக்கில் நூற்றுக்கணக்கான US ராணுவ வீரர்களின் மரணத்திற்கு அவர் தான் காரணம் என்று அமெரிக்கா கருதியது.

Source: Histustan Times

Similar News