தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் Dr தமிழிசை : கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்
தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் Dr தமிழிசை : கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்
தெலுங்கானா மாநில கவர்னராக தமிழக பா.ஜ.க மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று வெளியான புதிய கவர்னர்கள் பட்டியலில் Dr. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆரிப் முஹம்மத் கான் அவர்கள் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பந்தாரு ததத்ரேயா அவர்கள் ஹிமாச்சல் பிரதேஷ் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட்டுள்ளார்.
கள்ராஜ் மிஷ்ரா அவர்கள் ராஜஸ்தான் மாநில கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மஹாராஷ்டிரா மாநில கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள Dr தமிழிசையை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.