தெலுங்கானா ஆளுநராகிறார் Dr.தமிழிசை செளந்தரராஜன்!
தெலுங்கானா ஆளுநராகிறார் Dr.தமிழிசை செளந்தரராஜன்!;
தமிழக பா.ஜ.க தலைவராக Dr.தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2014-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். 2016-ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறை பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவருடைய பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
"தமிழிசை தன்னுடைய பரந்த சமூக அனுபவத்தாலும், தனது கல்வியாலும் தெலங்கானா வளர்ச்சி பாதைக்கு முக்கிய பங்காற்றுவார், அவரது திறமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என ட்வீட் செய்துள்ளார் பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு.சந்தோஷ்.
Dr.தமிழிசை செளந்தரராஜனின் நியமனத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் தமிழக பா.ஜ.க-வினர்.