டெல்லியின் புதிய கொரோனா மருத்துவமனை வார்டுகளுக்கு, கால்வான் மோதல் தியாகிகளின் பெயர்களை வைக்க DRDO முடிவு.! #Corona #Delhi #CentralGovt #IndianArmy

டெல்லியின் புதிய கொரோனா மருத்துவமனை வார்டுகளுக்கு, கால்வான் மோதல் தியாகிகளின் பெயர்களை வைக்க DRDO முடிவு.! #Corona #Delhi #CentralGovt #IndianArmy

Update: 2020-07-04 10:50 GMT

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லைப்பகுதியில் சமீபத்தில் நடந்த மோதலில், கால்வான் பள்ளத்தாக்கில் வீர மரணமடைந்த இந்திய வீரார்களின் பெயர்களை, டெல்லியில் புதிதாக உருவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் கோவிட் -19 மருத்துவமனையின் வெவ்வேறு வார்டுகளுக்கு பெயர் வைக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) முடிவு செய்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

கால்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை பின்னுக்குத் தள்ளி, தன் படையினரை முன்னால் இருந்து வழிநடத்தும் கடமையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த கர்னல் சந்தோஷ் பாபுவின் பெயரால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) மற்றும் வென்டிலேட்டர் பிரிவு ஆகியவை பெயரிடப்பட்டுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனையை மத்திய உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) திறந்து வைக்க உள்ளனர். இங்கு முழு குளிரூட்டப்பட்ட வசதியுடன் 1,000 படுக்கைகளும், பல ICUக்களும் கொண்டது.

டெல்லியின் சதர்பூர் பகுதியில் உள்ள ராதா சோமி சத்சங் பியாஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 10,000 படுக்கைகள் கொண்ட COVID-19 பராமரிப்பு மையத்திலிருந்து இந்த மருத்துவமனை தனியாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

Source: Times of India

Similar News