துர்கா பூஜை பந்தலைக் கலைத்து தேவி சிலையின் தலை துண்டிப்பு! 3 கிறிஸ்தவ வாலிபர்கள் கைது!!

துர்கா பூஜை பந்தலைக் கலைத்து தேவி சிலையின் தலை துண்டிப்பு! 3 கிறிஸ்தவ வாலிபர்கள் கைது!!

Update: 2019-10-10 05:19 GMT


அருணாச்சல பிரதேசத்தின் டோயுமுக் நகரில் கடந்த ஒரு வாரமாக துர்கா பூஜை அங்குள்ள சிறுபான்மை இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது சென்ற 5 ம் தேதி இரவில் சிலர் பூஜை நடை பெற்ற பந்தலுக்குள் சென்று இந்து தெய்வமான துர்கா தேவியின் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். அந்த பந்தலையும் அழித்துள்ளனர்.


இந்த சம்பவத்தால் அங்குள்ள இந்துக்கள் மன வருத்தம் அடைந்துள்ளனர். இது குறித்து அங்குள்ள நலன்புரி நலக்குழுத் தலைவர் டோபம் ரோபி கூறுகையில் “பக்தர்களின் நலனுக்காக 2 பந்தல்கள் அமைக்கப்பட்டன. அனைத்தையும் விஷமிகள் அழித்துவிட்டனர். இந்த நகரத்தில் இதற்கு முன்பு இதைப் போன்ற சம்பவம் நடைபெற்றதில்லை.


இந்த சம்பவத்தால் நாங்கள் ஒன்றும் துணுக்குறவில்லை. பெரிய சிலை சேதமுற்றாலும் சிறிய சிலைகளுடன் எங்கள் பூஜைகள் தொடர்வதாக” அவர் கூறினார்.


இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக 3 பேரை சந்தேகித்து போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் குற்றவாளிகளின் அடையாளங்களை வெளியிட அவர்கள் தயங்குகின்றனர். ஆனால் 3 பேரும் ஒரு கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் என முக நூல் பதிவுகள் கூறுவதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. இதை அடுத்து இந்த செய்தி இந்துக்கள் மத்தியில் சீற்றத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


This is a Translated Article From SWARAJYA


Similar News