ஊழியர்களே எங்களின் சொத்து.. ரூ.700 கோடி சிறப்பு போனஸ் அறிவித்த ஹெச்.சி.எல். நிறுவனம்.!
ஊழியர்களே எங்களின் சொத்து.. ரூ.700 கோடி சிறப்பு போனஸ் அறிவித்த ஹெச்.சி.எல். நிறுவனம்.!;
ஹெச்.சி.எல். நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவருக்கும் ஒன்டைம் என்று சொல்லக்கூடிய ரூ.700 கோடி ரூபாயை போனஸாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றாக ஹெச்.சி.எல் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. அதாவது 2020ம் ஆண்டில் மட்டம் 10 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை பெற்றுள்ளது. இதுதான் அந்த நிறுவனத்தின் அதிகமான வருவாய் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு உறுதுணையாக இருந்த அத்தனை ஊழியர்களுக்கும் அந்நிறுவனம் நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளது. மேலும், அவர்களுக்கு ரூ.700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்டைம் சிறப்பு போனஸை வழங்குகிறது. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.
மேலும் போனஸ் பற்றி அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறும்பொழுது, ஊழியர்கள்தான் எங்களின் சொத்து. அவர்களுக்காக 700 கோடி வழங்குவது பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.